படிப்பு, வேலை என பல்வேறு காரணங்களுக்காக வெளியூரில் ஆண்கள் வீடு எடுத்து தங்குவது பரவலாக காணப்படுகிறது. கையிலிருக்கும் சொற்ப காசில் ஹோட்டலில் வாங்கி உண்பது என்பது சாத்தியமில்லாதது. அதனால், பெரும்பான்மையான இளைஞர்கள் இப்பொழுது சமைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர். வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் தினுசு தினுசா சமைத்து உண்பதும், வேலை நாட்களில் அவசரமாய் சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.
அப்படி அவசரமாக சமைக்கும்போது ருசி இருக்குமா?! இருக்காது. ருசியாகவும், விரைவாகவும் சமைக்க நிறைய உணவு வகைகள் இருக்கு. அவற்றில் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.. விரைவாகவும், சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சமைக்கக்கூடிய சில்லி இட்லியை எப்படி செய்வது என பார்க்கலாம்….
தேவையான பொருட்கள்…
இட்லி – 4
பெரிய வெங்காயம் – 1
குடமிளகாய் – பாதி அளவு
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
பூண்டு – 2 பல்
கொத்தமல்லித்தழை (அ) வெங்காயத்தாள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் விழுது – ஒர் டீஸ்பூன் (மிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும்)
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கார்ன் ஃபிளவர் மாவு – ஒரு டீஸ்பூன்
செய்முறை…
வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை மீடியம் சைஸ் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். சில்லி இட்லி தயார்.
விருப்பப்பட்டால் மிளகாய் விழுது சேர்த்தப் பின்னர் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸையும் சேர்க்கலாம்.
பேச்சிலர்ஸ் சமையல் தொடரும்…