மாலைவேளையில் குழந்தைகளை குஷிப்படுத்த இந்த வாழைப்பழ அப்பத்தை செய்து கொடுங்க!!

By Staff

Published:

இந்த ஊரடங்கு சட்டத்தினால் வீட்டில் அடைஞ்சு கிடக்குறவங்களுக்கு மாலை வேளையில் எதாவது சாப்பிடவேண்டுமென தோன்றும். தினத்துக்கு என்ன செய்து கொடுப்பது என்பதே இல்லத்தரைசிகளின் தலைவலி. மாலைவேளையில் சாப்பிட, சத்தான, எளிதான வாழப்பழ அப்பம் செய்முறையை பார்க்கலாம்.

6098d335a080d64048ecbe605ba047cf

தேவையான பொருட்கள்..

கோதுமை மாவு – 4 கப்

 தூளாக்கிய வெல்லம் – ஒன்றரை கப்,

 பூவன் வாழைப்பழம் – ஒன்று,

 அரிசி மாவு – ஒரு கப்

 ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு மசித்துப் பிசைந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைக்கவும். கரைத்த மாவை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு பணியார சட்டியை சூடுபடுத்தி, எண்ணெயைக் காயவிட்டு, மாவை சிறிய குழிக் கரண்டியால் எடுத்து ஊற்றி இரு பக்கமும் சிவக்கவிட்டு அப்பங்களாக பொரித்து எடுக்கவும்.

பணியார சட்டிக்கு பதிலாக எண்ணெயில் ஊற்றியும் பொரித்தெடுக்கலாம்.

இனிப்பு என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வெல்லம், வாழைப்பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் நேராது.

Leave a Comment