குழம்பு வைக்க நேரமில்லையா?! இந்த பருப்பு பொடி வீட்டில் இருந்தா சமாளிக்கலாம்…

By Staff

Published:

வெளியில் சென்று நேரங்கழிச்சு வரும்போதோ அல்லது குழம்பு, ரசம்ன்னு வைக்க நேரமில்லாத போதோ சாதம் மட்டும் வடிச்சு, இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடலாம்… தொட்டுக்க சிப்ஸ் அல்லது அப்பளமோ அல்லது பக்கோடாவோ இருந்தாலும் போதும்..

b741f8b2da683c587a7b27ae4ceca605

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1கப்
கடலை பருப்பு – 1கப்
காய்ந்த மிளகாய் வற்றல் – காரத்திற்கேற்ப
பெருங்காயம் -1 டீஸ்பூன்
எண்ணெய் – 1டீஸ்பூன்
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

எண்ணெய் ஊற்றி காய்ந்தப்பிறகு உ.பருப்பு, க.பருப்பை சிவக்க வறுக்கவும். தேங்காய் துருவலைவெறும் வாணலில் சிவக்க வறுக்கவும். புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும். மிளகாயையும் சிவக்க விட்டு வறுத்தெடுக்கவும்.
ஆறினதும் மிக்சியில் போட்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். நன்கு காய்ந்த பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு , தேவையானபோது சுடு சாதத்தில் இந்த பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும்.

தொட்டுக்கொள்ள அப்பளம், சிப்ஸ், பக்கோடா போதும்…

Leave a Comment