ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி சட்னி

By Staff

Published:

கொத்தமல்லியின் வேர், தண்டு, இலை, விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. கொத்தமல்லியின் விதைகளை தனியா என்று அழைப்பர். இரவு படுக்கும்முன் தனியாவை மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியினை தொடர்ந்து சாப்பிட்டு வர கருவில் இருக்கும் குழந்தையின் எலும்புகள் வலுப்படும். சரும பளபளப்பிற்கு கொத்தமல்லியினை மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம். கொத்தமல்லியை சாறெடுத்து தேன் கலந்து குடித்துவர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் இளைக்கும்.

e5729121db5489f7a6a8b126f8fcee64

இனி, கொத்தமல்லியில் சட்னி செய்வது எப்படியென பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி – 1 கட்டு

வெங்காயம் – 2

தக்காளி – 1

வரமிளகாய் – 5

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு- 2 பல்

இஞ்சி – 1துண்டு

புளி – சுண்டைக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொத்தமல்லியினை ஆய்ந்து, நீரில் அலசிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வறுக்கவும்.மூன்றும் சிவந்ததும்,கொத்தமல்லியினை போட்டு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!!!

து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டிக்கலாம்.. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கலுக்கு ஏற்ற சைட் டிஷ் இது..

Leave a Comment