வேப்பம் பூ செரிமானப் பிரச்சினைகள், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த வேப்பம் பூவில் சூப்பினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேப்பம் பூ – கைப்பிடியளவு
நெய் – 4 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் நெய் ஊற்றி வேப்பம் பூவைப் போட்டு வதக்கி நாட்டுச் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- அடுத்து கொதித்த கலவையுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் வேப்பம் பூ சூப் ரெடி.