தேவையான பொருட்கள்..
தர்பூசணி – 300 கிராம்,
பன்னீர் திராட்சை/கருப்பு திராட்சை – 50 கிராம்,
சர்க்கர/தேன் – ருசிக்கேற்ப
செய்முறை:
தர்பூசணியைத் தோல் நீக்கி, விதைகளை எடுத்து, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பன்னீர்/கருப்பு திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கழுவ வேண்டும்.
பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர்/கருப்பு திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய ஜூஸில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் சர்க்கரை/தேன் கலந்து தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்தோ அல்லது ஐஸ்கட்டி கலந்தோ குடிக்கலாம்.
சளிப்பிடிக்கும் என அஞ்சுபவர்கள் உப்பும், மிளகுதூளும் லேசாய் தூவிக்கலாம்.