அமா’ன்னா ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்ததுன்னு பொருள். ‘வாசி’ன்னா சாதகமான அல்லது பொருத்தமானதுன்னு பொருள். ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் சேர்வதால் அமாவாசை என்று பெயருண்டாச்சு. மூதாதையர்கள் மட்டுமில்லாம தேவர்களும் அமாவாசை தினத்தின் அதிபதிகள்.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் லோகம் உள்ளது. இறப்புக்குப்பின் நமது ஆன்மா அங்குதான் சென்றடைகிறது. உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆன்மாவும் வலிவு உள்ளது. அவ்வலிமை கடவுளுக்கு ஈடானது. அதனால், நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தாத்தான்னு நம் முன்னோர்களை முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் நமது முன்னேற்றத்திற்கு அவர்களின் முழு ஆசீர்வாதம் செய்வார்கள். நமக்கு துன்பம் வரும்போது நம்மை காக்கவும் செய்வார்கள். நம் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களை இன்னாரென அடையாளம் கண்டுக்கொள்ள இயலாது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் வணங்கவும் முடியாது. அதனால்தான் ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்சபூதங்களை முன்னிறுத்தி உரிய மந்திரங்களோடு நம் முன்னோர்கள் அனைவரையும் வணங்குவதே பித்ரு ஹோமம் ஆகும்.
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வீட்டினை சுத்தம் செய்து, மனத்தூய்மையோடு, காலைவேளையில் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். தர்ப்பணம் கொடுப்பவரது வீட்டில், அமாவாசை தர்ப்பணம் கொடுத்தப்பிறகே வீட்டில் விளக்கேற்றவும், மற்ற தெய்வ வழிப்பாட்டையும் செய்ய வேண்டும். அன்று காலை உபவாசம் இருக்க வேண்டும். முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். மதியம் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து நைவேத்தியம் காட்ட வேண்டும். நைவேத்தியம் செய்த உணவை காக்கைகளுக்கு வைத்து காக்கைகள் உண்டப்பின் மதிய உணவு சாப்பிடலாம். கத்தரிக்காய், வாழைக்காய் கண்டிப்பாய் சேர்க்க வேண்டும். பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மாமிசம் சேர்த்தல் கூடாது. மிளகும், பச்சரிசியும் சேர்த்தல் நலம். இரவு உணவு கூடாது. பால் பழம் சாப்பிடலாம். பூசணிக்காய்., எலுமிச்சை பலி கொடுப்பது நல்லது. பூசணிக்காயில் அசுரன் இருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றது. எலுமிச்சை கண் திருஷ்டி போக்கும். இன்றைய தினம் தானங்கள் செய்வது கூடுதல் பலன்களை தரும்.
இவ்வாறு செய்தால் அகால மரணமடைந்தவர்களது ஆத்மாக்களும், நமது முன்னோர்களின் ஆத்மாக்களும் நமக்கு ஆசி வழங்கும்.