கேரள ஸ்டைல் ஆரஞ்சு குலுக்கி .

By Staff

Published:


2594a38efb8cf90a12e6e921740601de

தேவையான பொருட்கள்..

ஆரஞ்சு சாறு – 1 கப்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சப்ஜா விதை – 1 ஸ்பூன்
இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்ஜா விதையை சிறிது நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும். * ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பச்சை மிளகாய், சோடா, சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 30 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.

* கோடை வெயிலுக்கு இதம் தரும் குலுக்கி சர்பத் ரெடி. 

Leave a Comment