இது மாங்காய் சீசன். மாங்காயில் சாதம், ஊறுகாய், பச்சடின்னு செய்து சாப்பிட்டிருப்போம். ஆனா ஜூஸ் செய்து குடிச்சிருப்போமா?! குடிச்சதும் புத்துணர்ச்சி கொடுக்கும் மாங்காய் ஜூஸ் செய்முறையை பார்ப்போமா?!
தேவையான பொருட்கள்…
பச்சை மாங்காய் – 1
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
தேன் – 5 டீஸ்பூன்
ஐஸ்கட்டி – 5
தண்ணீர் – 2 கப்
செய்முறை :
மாங்காய் தோலை சீவி, விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயை 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மிக்சியில் சீரகத்தூள், மிளகு தூள், தேன், உப்பு, புதினா, ஐஸ் தண்ணீர், ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக அடிக்கவும்.
இந்த ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி ஜில்லென பருகலாம். புளிப்பும் இனிப்புமாய் குடிக்க நல்லா இருக்கும். தேனுக்கு பதிலாய் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.