நினைவுத்திறன் அதிகரிக்கும் வெண்டைக்காய் தயிர் பச்சடி

By Staff

Published:

f1807b2aae535132abfd571d3a427813

தேவையான பொருட்கள்…..

வெண்டைக்காய் – 10

கெட்டித் தயிர் – முக்கால் கப்

அரைக்க:

தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி

வரமிளகாய் – 2

கிராம்பு – 2

தாளிக்க

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

கடுகு – அரைத் தேக்கரண்டி

வரமிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

6ac86445b75e54f74ccbe27f17ff1e68

செய்முறை

வெண்டைக்காயைக் கழுவி ஈரம் போக துடைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். வெண்டைக்காயை உப்பு சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். பின்பு அரைத்த கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும். நன்கு ஆறியதும் தயிர் கலந்து பரிமாறவும். சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி தயார்.

வயதான பெரியவர்களின் மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இந்த வெண்டைக்காய். மூட்டுகளுக்கிடையே இருக்கும் ஒரு திரவத்தை சுரக்க செய்வதில் வெண்டைக்காய் முதலிடம். வெண்டைக்காய் சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்குமென்பது சின்ன குழந்தைக்குக்கூட தெரியும்.

Leave a Comment