தேவையான பொருட்கள் :
வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : 1 கப் (250 கி -300கி)
கடலை பருப்பு : 200 கிராம்
காய்ந்தமிளகாய் : 4 -5
லவங்கம் : 2
சோம்பு – 1/4 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிது
வெங்காயம் : 1
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை :
கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். ஊறின கடலைப்பருப்பில் கைப்பிடி கடலைப்பருப்பினை எடுத்து வைத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் கடலை பருப்புடன் காய்ந்தமிளகாய், சோம்பு, லவங்கம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஒன்றும் பாதியுமாக அரைத்த மாவில், எடுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு, நறுக்கிய வாழைப்பூ கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்றாக பிசைந்து, நன்றாக எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு, சிவந்தவுடன் எடுக்கவும்.
சுடச்சுட சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும். உடலுக்கு மிக நல்லது…