இப்படி ஒரு பச்சடியா?!

By Staff

Published:


cab4a4a363bf0803e05618976a856c03

உருளைக்கிழங்கில் சிப்ஸ், வறுவல், பொரியல், பொடிமாஸ், குருமா.. இதுலாம் செய்து சாப்பிட்டிருக்கோம். உருளைக்கிழங்கில் பச்சடின்னு சொன்னால் எல்லாரும் ஒருமாதிரியாதான் பார்ப்பாங்க. ஆனா,உருளைக்கிழங்கில் பச்சடியும் செய்யலாம்.. எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

தேவையான‌ பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 3
கட்டித் தயிர் – 1 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான‌ அளவு
செய்முறை :
கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேக வைத்து ஒன்றிரண்டு துண்டுகளாக‌ வெட்டி வைக்கவும்.
தயிரில் நறுக்கி மிளகாய், உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்கு கடையவும்.
கடைசியாக அதில் உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கவும். குளிரவைத்து பரிமாறவும்

விருப்பட்டால் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்தும் சேர்க்கலாம்…

Leave a Comment