தெளிவான கண்பார்வைக்கு பொன்னாங்கண்ணி கீரை சூப்

By Staff

Published:

913d23ab804e7a4e30a164c1d2227ae3

கீரைகளின் ராஜா என செல்லமாய் அழைக்கப்படும் பொன்னாங்கண்ணியை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் வலு பெறும். எலும்பு உறுதிப்படும். கண்பார்வை தெளிவடையும், ரத்தம் சுத்தமாகும், உடல் மினுமினுக்கும். கல்லீரல் மண்ணீரல் நோய்கள் குணமடையும் இத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி கீரையில் பொரியல், கடையல், குழம்பு, சூப் என செய்து அசத்தலாம்

பொன்னாங்கண்ணி கீரையில் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம்…

6f9f3f5a3344d076812368a5ab507f34-1

தேவையானவை

பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கப்
தனியா – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்

செய்முறை

இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு தம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு,தனியா ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும். வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.

Leave a Comment