கூந்தலை அடர்த்தியாக்குவதிலும் சரி, கூந்தலினை பட்டுப் போல் மிளிரச் செய்வதிலும் சரி ஆளி விதை முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய ஆளி விதையில் இப்போது ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆளி விதை- 30 கிராம்
பால்- அரை டம்ளர்
தண்ணீர்- கால் டம்ளர்
செய்முறை:
1. பாலினை தண்ணீர்விடாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
2. ஒரு பாத்திரத்தில் கால் பாத்திரம் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் ஆளி விதையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
3. அடுத்து இதில் இருந்து கஞ்சிப் பதத்திற்கு சாறு வெளிவந்ததும் பாலினை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ஆளிவிதை ஹேர்பேக் ரெடி.
இந்த ஆளிவிதை ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து ஊறவிட்டு, சீயக்காய் கொண்டு அலசினால் கூந்தல் அடர்த்தியாகும்.