நகங்கள் அழகாக டிப்ஸ்!

By Staff

Published:

முகத்துக்கு அதிகமாக கொடுக்கற கவனிப்பை யாரும் பாவம் இந்த நகத்துக்கு கொடுக்கறதே இல்லைங்க. நகத்தை சாதாரணமா நினைக்க கூடாதுங்க. இந்த நகங்கள் அழகு சம்பந்த பட்டது மட்டுமில்ல. ஆரோக்கியம் சம்பந்த பட்டதும் கூட.

7b44262d7f0d881bbcdc09ed18f58051

நகத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்:

நகங்களை அவை ஈரமாக இருக்கும்ப்போது வெட்ட கூடாது. அப்படி வெட்டினால் சரியான ஷேப் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கு.

மாதம் ஒருமுறையாவது நகங்களின் மேல் பாதாம் எண்ணை அல்லது கிளிசரின் கலந்த எலுமிச்சை சாறு பூசி அதனை சிறிது நேரம் கழித்து கடலைமாவினால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் நகம் பளபளப்பாகும்.

மருதாணி வைப்பது, ஆலிவ் எண்ணையை தேய்த்தல் போன்றவற்றை செய்து வந்தால் நகங்கள் எளிதில் உடைந்து போகாமல் இருக்கும்.

நகங்களை எப்போதும் பற்களால் கடிக்க கூடாது. துணி துவைக்க, பாத்திரம் கழுவ தரமான சோப்புகளையே பயன்படுத்துங்கள். தரமில்லாத சோப்களால் நகங்கள் பழுதாக கூடும்.

சிலருக்கு நகங்கள் வளர்வது குறைவாக இருக்கும். அவர்கள் மாதம் ஒருமுறை மெனிக்யூர் பெடிக்யூர் செய்வதால் விரல்களில் ரத்த ஓட்டம் ஏற்பட்டு நகவளர்ச்சி ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடாலும் கூட நகவளர்ச்சி குறையாலாம்.  இதற்கு புரோட்டின் அதிகமுள்ள உணவுகள்,  வைட்டமின் ஏ, கால்சியம்,  துத்தநாகம், வைட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதனால் நல்ல பலன் ஏற்படும். கூடவே உடல் ஆரோக்கியமும் மேம்படும். தினந்தோறும் தேவையான அளவு தண்ணீர், பழரசங்கள் போன்றவற்றை அருந்துவதும் நகத்திற்கு வலிமை தரும்.

Leave a Comment