ஞான ஒளி -தேவாரப்பாடலும், விளக்கமும்

By Staff

Published:


a849405b2cccd1b2900d58e8a6c8f119

பாடல்

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
    கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்..

கரிய உடல் ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும், நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற பழைய மேம்பட்ட ஒளியை உடையவன். உள்ளத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன். பெரிய இந்நில உலகையும், வானத்தையும், தேவர் உலகையும் உள்ளிட்ட ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

Leave a Comment