ஓட்ஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருளாகும். அந்த ஓட்ஸின் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஓட்ஸ் உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது, அதாவது உடல் எடையினைக் குறைக்க நினைக்கும் பலரும் ஓட்ஸினை தினசரி காலை உணவாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் மதிய உணவாக அரிசியில் ஏதாவது உணவு வகையினை எடுத்துக் கொண்டாலும் இரவு மீண்டும் ஓட்ஸினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். நிச்சயம் இது உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் ஓட்ஸில் அதிக அளவு புரதச் சத்து உள்ளதால் தோலினை பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவுகின்றது. மேலும் ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தானது டயட் கண்ட்ரோல் உணவாக இருக்கக் காரணமாக உள்ளது.
மேலும் செரிமானப் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஓட்ஸினை காலை அல்லது மாலை என ஏதாவது ஒரு வேளை உணவாகக் கொடுத்தல் வேண்டும்.
அதேபோல் ஓட்ஸ் என்றால் பாலில் கலந்து சாப்பிடும் ஒரு உணவுதான் என எண்ணி பலரும் அதனை சாப்பிட கஷ்டப்படுவர். ஆனால் ஓட்ஸில் உப்புமா, பிரியாணி, அடை, தோசை என பல வகையான ரெசிப்பிகளாக செய்து சாப்பிட முடியும்.
ஓட்ஸ் கெட்ட கொழுப்பினைக் குறைப்பதோடு இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையினைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.