பனைமரத்தில் இருந்து கிடைக்கும் வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் பனங்கற்கண்டு. இதன் மருத்துவ குணங்கள் அளப்பரியதாக உள்ளது
பனங்கற்கண்டு பித்தம், வாதம் போன்ற பிரச்சினைகளுக்குப் பெரும் தீர்வாக இருக்கின்றது. நாம் வீடுகளில் பொதுவாக வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவதைக் காட்டிலும் பனங்கற்கண்டினை பயன்படுத்துவது உடலுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
பனங்கற்கண்டு செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. மேலும் சளி, நீர் வடிதல், இருமல், தும்மல், நெஞ்சுச் சளி போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பனங்கற்கண்டினை எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரையினை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதுண்டு. ஆனால் அவர்கள் கொஞ்சமும் பயப்படாமல் பனங்கற்கண்டினை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் உடல் மெலிந்து இருப்போர் உடல் எடையினை அதிகரிக்க நினைத்தால் பாலில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வருதல் வேண்டும்.
மேலும் இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதாகவும் உள்ளது. மேலும் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் பனங்கற்கண்டினை எடுத்துக் கொண்டுவந்தால் உடல்நிலை சீராக இருக்கும்.
மேலும் இது பல் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துவதோடு உடலில் உள்ள எலும்புகள் அனைத்தையும் வலுப்படுத்தச் செய்வதாக உள்ளது.