பொதுவாக நாம் சைவ மற்றும் அசைவ உணவுகளில் சீரகத்தினை சேர்த்துச் சாப்பிடுவோம். ஆனால் கருஞ்சீரகத்தினை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. ஆனால் இதன் நன்மைகள் தெரிந்தால் இனி நாம் இதனை நம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வோம்.
கருஞ்சீரகம் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருந்துவருகின்றது. இதனை வாணலியில் லேசாக வறுத்து பொடித்து நாம் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தும் எண்ணெயில் போட்டு ஊறவைத்துப் பயன்படுத்தவும்.
மேலும் கருஞ்சீரகமானது சளி மற்றும் இருமல் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. அதாவது கருஞ்சீரகத்தினைக் கொண்டு காஃபி செய்து குடித்துவந்தால் இந்தப் பிரச்சினைகள் அடியோடு காணாமல் போகும்.
மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றான மாதவிடாய்ப் பிரச்சினைக்கு கருஞ்சீரகம் மிகப் பெரும் தீர்வாக உள்ளது.
குழந்தைபெற்ற பெண்கள் உடல் வலுவிழந்து காணப்படும் நிலையில் கருஞ்சீரகத்தினைத் தொடர்ந்து எடுத்துவந்தால் உடல் வலுப்பெறும்.
மேலும் கருஞ்சீரகத்தினை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு குடித்துவந்தால் கெட்ட கொழுப்புகள் காணாமல் போகும். நிச்சயம் 2 மாதம் தொடர்ந்து குடிக்கும் பட்சத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உங்களால் காண முடியும். மேலும் இது உடல் குளிர்ச்சியினை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.