சப்போட்டா பழம் வாய்ப்புண், குடல் புண், தொண்டைப் புண் போன்றவற்றினைச் சரிசெய்யக் கூடியதாக உள்ளது. மேலும் சப்போட்டா பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரும்ம் பளபளவென மின்னும்.
சப்போட்டா பழம் உடலின் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரித்து, இரத்த விருத்திக்கு உதவுகின்றது. இதனால் நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளான மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் வெள்ளைப்படுதல் பிரச்சினை இருப்பவர்கள் சப்போட்டா ஜூஸினை வாரத்தில் இரண்டுமுறை என்ற அளவில் குடித்து வருதல் வேண்டும்.
சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு கால்சியமானது எலும்பினை வலுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதாக உள்ளது.
இரத்த சோகைப் பிரச்சினை இருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் இரும்புச் சத்தினை உடலில் அதிகரிக்க சப்போட்டா பழத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சப்போட்டா பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு முடி கொட்டுதல் பிரச்சினை தீர்வது மட்டுமின்றி, தலைமுடி அடர்த்தியாகவும் செய்யும்.