ஆவாரம்பூவின் நன்மைகள் தெரிஞ்சால் தேடிக் கண்டுபிடித்து சாப்பிடுவீர்கள்!

By Staff

Published:

46f542c45c3693b3aa4ec18077dd8266

ஆவாரம்பூ சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது. அதாவது ஆவாரம்பூவில் ஜூஸ் செய்து தினசரிக்குக் குடித்து வருதல் வேண்டும்.

மேலும் ஆவாரம்பூ சிறுநீர்ப் பெருக்கத்தைத் தூண்டுவதாகவும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க் கடுப்பு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் ஆவாரம்பூவினை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்தால் உடல் சூடு குறையும். மேலும் தலைமுடி உதிர்வதும் கட்டுக்குள் வரும். 
 
ஆவாரம்பூ ஜூஸ் வாய்ப்புண், குடல் புண், தொண்டைப் புண் பிரச்சினைகளைச் சரி செய்வதாக உள்ளது.

மேலும் உடலில் அரிப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆவாரம்பூவினை தயிருடன் கலந்து அரைத்துத் தேய்த்தால் சருமப் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும்.

குடலிறக்கப் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆவாரம்பூவினை பழங்காலத்தில் இருந்தே கொடுத்துவருவது வழக்கம். மேலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யவும் செய்கின்றது.
 

Leave a Comment