கிவிப் பழம் ஒபேசிட்டி என்னும் உடல் எடை கூடி இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த பழ வகையாகும், கிவி பழத்தினை நாள் ஒன்றுக்கு ஒரு பழம் என்று எடுத்துவந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைத்து உடல் எடையினைக் குறைக்கச் செய்யும்.
மேலும் குழந்தைகளுக்குக் கிவிப் பழத்தினை ஒன்று என்ற அளவில் கொடுத்துவந்தால் மூளை வளர்ச்சி மேம்படுவதோடு, குழந்தைகள் சுறுசுறுப்பாகச் செயல்படவும் செய்வர்.
மேலும் கிவிப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் இரும்புச் சத்து உணவினை உட்கிரகிக்கச் செய்கின்றது.
மேலும் கிவிப் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கர்ப்பப்பை வீக்கம் போன்றவற்றிற்குக் கிவிப் பழமானது மிகச் சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.
மேலும் கோடை காலங்களில் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் கிவிப் பழம் உதவுகின்றது.