விஜய் ஆட்சியை கவிழ்க்க 35 கோடி எம்எல்ஏ தருவதாக பேரம் பேசிய குற்றச்சாட்டில் ஐடிபிஎஸ் தலைவர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்ட பிறகு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது பின்னணி குறித்து ஆய்வு செய்தால், அவர் ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு எதிராக செயல்பட்டு வந்தார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம், முன்னாள் லயோலா கல்லூரி மாணவர் என்ற போர்வையில் அவர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூட, விஜய் பற்றி அவர் தாறுமாறாக விமர்சனம் செய்து தனது வன்மத்தைக் கக்கியிருந்தார்.
அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத ஒரு கூட்டம் தான் விஜய்க்கு பின்னால் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், எம்ஜிஆர் அளவுக்கு விஜய்க்கு புகழ் இல்லை என்றும், இது ஒரு பொய்யான பிம்பக் கட்டமைப்பு என்றும் கடுமையாகச் சாடினார். அதுமட்டுமின்றி, அவரது கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் 15 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறாது என்றும், அந்த கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்பது போலவும் அவர் ஆணித்தரமாகக் கூறியிருந்தார்.
ஆனால், திருநாவுக்கரசு வெளியிட்ட அந்த கருத்துக்கணிப்பு முழுக்க முழுக்கப் பொய்யாகிப் போனது மட்டுமின்றி, தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் விஜய்யின் பக்கமும், அவரது கொள்கைகளின் பக்கமும் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக நிரூபித்துக் காட்டின.
தன்னுடைய கணிப்பையெல்லாம் தூள் தூளாக்கி விஜய் இமாலய வெற்றி பெற்றதால், விஜய் மீது அசுரத்தனமான அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் திருநாவுக்கரசு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர், எப்படியாவது விஜய் தலைமையிலான ஆட்சியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் காய் நகர்த்தத் தொடங்கினார்.
இதன் காரணமாகவே, அவர் செந்தில் பாலாஜியின் விசுவாசக் கையாளாக மாறி, எப்படியாவது தவெக எம்எல்ஏ-க்களை இழுத்து ஆட்சியைத் தவிக்க வைக்க முயற்சி செய்திருப்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை என்று தற்போதைய அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாண்புமிகு ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசி மிரட்டிய புகாரில் தான் தற்போது திருநாவுக்கரசு சிக்கியுள்ளார்.
மொத்தத்தில், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்புகளையும், கருத்துக்களையும் மக்கள் மத்தியில் திணிக்க முயன்ற பொய்யானவர்களின் நிஜ வேடம் தற்போது சட்டத்தின் முன் முழுமையாகக் களைந்து விட்டது என்பதே கசப்பான உண்மையாகும். அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யத் துணியும் இதுபோன்ற நபர்களின் சதித்திட்டங்கள் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
