உடல்சூட்டால் கஷ்டப்படுறீங்களா?! அப்ப இந்த பாலை குடிங்க!

நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை சுத்தம் செய்து அதனுடன் இருமடங்கு கற்கண்டை சேர்த்து இடிச்சு, லேகியம் பதத்திற்கு வந்ததும் அதனுடன் மூன்று மடங்கு தேனை சேர்த்து கலந்தூ ஒருவாரம் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம்.…


நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை சுத்தம் செய்து அதனுடன் இருமடங்கு கற்கண்டை சேர்த்து இடிச்சு, லேகியம் பதத்திற்கு வந்ததும் அதனுடன் மூன்று மடங்கு தேனை சேர்த்து கலந்தூ ஒருவாரம் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம். மணமுள்ள இந்த குல்கந்து வயிற்று கோளாறினை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. வலியுடன் கூடிய மாதவிடாய் குணமாகும். வெள்ளைப்படுதலையும் குணமாக்கும்.விந்துவில் உள்ள உயிரணுக்களின் வளர்ச்சிக்கும் குல்கந்து நல்லது. தினமும் இதை சாப்பிட்டுவர ஆண்மை பெருகும். விந்து கெட்டிப்படும். சிறுவர்கள் 1/2 டீஸ்பூனும், பெரியவர்கள் 1 டீஸ்பூனும் சாப்பிட்டு வர உடல் சூட்டினை குறைக்கும்.

குல்கந்தில் அல்வா, கேசரி, மில்க் ஷேக், லஸ்ஸி, பால் என பலது செய்யலாம்.. இன்னிக்கு குல்கந்த் பால் செய்வது எப்படி என பார்க்கலாம்…

16e744ab5a28dac710fafb61533125fe-1

தேவையான பொருட்கள்..

பால்- 3 கப்

குல்கந்த்- 3 டீஸ்பூன்

சர்க்கரை -ருசிக்கேற்ப

பாலாடை- 3 டீஸ்பூன்,

அலங்கரிக்க பிஸ்தா, பாதாம், முந்திரி…

செய்முறை..

பாலை சுண்ட காய்ச்சி ஆறவிடவும், அதோடு சர்க்கரை, குல்கந்து சேர்த்து நன்றாக கலக்கவும். அதோடு பாலாடை சேர்த்து மிக்சியில் அடித்து டம்ப்ளர்களில் ஊற்றி, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன