சளி, இருமலால் கஷ்டப்படுறீங்களா?!வெற்றிலை துளசி சூப் ஒரு கப் குடிங்க!

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணமிது. மழைக்காலத்தோடு சளி, இருமல், காய்ச்சல், மாதிரியான உடல் உபாதைகள் வரும். அவற்றை வராமல் தடுக்கவும், வந்தபின் அவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவமுறையில் சொல்லி உள்ள வெற்றிலை,…

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணமிது. மழைக்காலத்தோடு சளி, இருமல், காய்ச்சல், மாதிரியான உடல் உபாதைகள் வரும். அவற்றை வராமல் தடுக்கவும், வந்தபின் அவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவமுறையில் சொல்லி உள்ள வெற்றிலை, துளசி சூப் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆங்கில மருந்துகள் போலல்லாமல் இது பக்கவிளைவுகள் இல்லாதது.

தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1 கப்
சீரகப் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை – 5 அல்லது 6 இலைகள்
புளி கரைசல் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – ஒன்று
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை
இஞ்சியை ஒன்றும் பாதியாக நசுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, கொதித்ததும், அதில், மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்து சூடாக சூப்பைப் பரிமாறவும்.

இந்த சூப்பை குடித்தால் இருமல், சளி, காய்ச்சலால் வரும் உடல்வலி குணமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன