கருப்பு திராட்சையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

திராட்சையில் கருப்பு, பச்சை என இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் பச்சை திராட்சையையே பலரும் விரும்பிச் சாப்பிடுவர். அதற்குக் காரணம் அதில் இருக்கும் இனிப்பு சுவையே ஆகும். ஆனால் இதையே கருப்பு திராட்சையினை எடுத்துக்…

ae8b39d13066ac1e3b889a2e13936628-2

திராட்சையில் கருப்பு, பச்சை என இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் பச்சை திராட்சையையே பலரும் விரும்பிச் சாப்பிடுவர். அதற்குக் காரணம் அதில் இருக்கும் இனிப்பு சுவையே ஆகும். ஆனால் இதையே கருப்பு திராட்சையினை எடுத்துக் கொண்டால் அது புளிப்பாக இருக்கும்.

அதனால் அதை யாரும் விரும்பிச் சாப்பிடுவதில்லை. அதாவது கருப்பு திரட்சையினை தினமும் மூன்று என்ற கணக்கில் என்று சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

மேலும் இது உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கிறது, இதனால் இரத்த சோகைப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கும் பெரும் தீர்வாக உள்ளது.

மேலும் இது நரம்பு செல்களின் இயக்கத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் செரிமானப் பிரச்சினைகளான வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு பெரும் தீர்வாக உள்ளது.

இது சிறுநீரகத்தின் செயல்பாட்டினை மேம்படுத்துவதாகவும், மலச்சிக்கலுக்குப் பெரும் தீர்வாகவும் உள்ளது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் குறைப்பதாய் உள்ளது.

இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினைக் கட்டுக்குள் வைத்து, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன