அதிமுக-வுல இருந்தப்போ 27.9 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் வைத்திலிங்கம்… அப்படியே திமுக-வுக்குத் தாவின உடனே அக்மார்க் உத்தமரா? பார்ட்டி மாறினா கேஸ் ஃபைல் தானா மூடிடும்னு நினைச்சீங்களா? நீங்க என்னதான் ‘வாஷிங் மெஷின்’ அரசியல் பண்ணினாலும், சட்டத்தோட சக்கரம் சுழல ஆரம்பிச்சா எப்பேர்ப்பட்ட விக்கெட்டும் அட்ரஸ் இல்லாமப் போகும்! இப்ப தெரியுதா அருண் எதற்காக DVAC தலைமை பொறுப்பை ஏற்றாருன்னு..

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த வைத்திலிங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட 27.9 கோடி ரூபாய் ஊழல் வழக்கை, லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியுள்ளது. ஒரு தனியார்…

vaithilingam arun

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த வைத்திலிங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட 27.9 கோடி ரூபாய் ஊழல் வழக்கை, லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியுள்ளது. ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து அவர் இந்த தொகையை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த விவகாரத்தை மறுவிசாரணை செய்ய ஊழல் தடுப்புப்பிரிவு தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சியின் போது, கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று இந்த லஞ்ச வழக்கு முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாகச் சில அரசு அனுமதிகளை வழங்குவதற்காக 27.9 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றார் என்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை நடத்தி வந்தது.

இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அவர் தான் பல வருடங்களாக இருந்த அதிமுக கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, ஆளுங்கட்சியான திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்த அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, அவர் மீதான லஞ்சப் புகார் குறித்த வழக்கு அண்மையில் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

அந்த நீதிமன்ற விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான இந்த ஊழல் வழக்கு கடந்த பிப்ரவரி மாதமே லஞ்ச ஒழிப்புத்துறையால் முழுமையாக மூடப்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சிகரமான தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் நீதிமன்றத்தில் வெளிவந்ததை தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் எழ தொடங்கின.

வைத்திலிங்கம் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த காரணத்தினால்தான், அவர் மீதான இவ்வளவு பெரிய ஊழல் வழக்கு அவசர அவசரமாக மூடப்பட்டதா என்று பல்வேறு தரப்பினரும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர். இந்த விவகாரம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறி, அரசுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் பெரும் பொதுமக்களின் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கடுமையான விமரிசனங்களை தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் அருண் இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது இந்த வழக்கைத் திரும்பப் பெற்று மறுவிசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய விசாரணையில், 27.9 கோடி ரூபாய் லஞ்சப் புகார் குறித்தும், அதற்கு முன்பாக இந்த வழக்கு எந்தச் சூழ்நிலையில், யாரால் மூடப்பட்டது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.