பச்சைப் பயறில் உள்ள நன்மைகள் இவைகள்தான்!!

பச்சைப் பயறினை குழம்பு, பொரியல், கூட்டு, கடையல், வடை எனப் பல வகையான ரெசிப்பிகளை நாம் செய்து சாப்பிட்டு இருப்போம், ஆனால் இந்த பாசிப் பயறில் உள்ள நன்மைகள் குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை. அந்தப்…

3580ba2dbd02b42d9376fa288f296179-1

பச்சைப் பயறினை குழம்பு, பொரியல், கூட்டு, கடையல், வடை எனப் பல வகையான ரெசிப்பிகளை நாம் செய்து சாப்பிட்டு இருப்போம், ஆனால் இந்த பாசிப் பயறில் உள்ள நன்மைகள் குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை. அந்தப் பச்சைப் பயறின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பாசிப் பயறு அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதில் நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துகளும் பாசிப் பயறில் உள்ளது. பாசிப் பயிறினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் கட்டுக்குள் வரும்.

 மேலும் பாசிப்பயிறானது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான தோல் வறட்சி, அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் பாசிப் பயிறானது கரு வளர்ச்சிக்கு உதவுவதாக உள்ளது.

மேலும் பாசிப்பயிறானது செரிமானப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கும் என்று தெரிகிறது. மேலும் 6 மாதங்கள் நிறைந்த குழந்தைகளுக்கு பாசிப்பயிறில் வேகவைத்த தண்ணீரை கொடுத்துவர வேண்டும்.

இதையும் பார்க்க: கம்பில் உள்ள சத்துகள் இவைகள்தான்!

மேலும் இது உடல் சூட்டினைக் குறைத்து உடலினைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது. மேலும் இது நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்வதாகவும் உள்ளது. இதனால் படிக்கும் குழந்தைகளுக்கு சாம்பார், ரசம், கூட்டு, பாயாசம், கேசரி என ஏதாவது ஒரு வகையில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன