மக்காச் சோளத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாமா?

மக்காச் சோளமானது மிகவும் மலிவான விலையில் சந்தைகளில் கிடைப்பதாய் இருக்கும். இதனை சுட்டும் சாப்பிடலாம், வேகவைத்தும் சாப்பிடலாம். சுட்டு சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்களானது அழிந்துவிடும். அதனால் வேகவைத்து சாப்பிடுவதே நமது உடலுக்கு முழு…

464d961c5de8f37e034da69d5f886255

மக்காச் சோளமானது மிகவும் மலிவான விலையில் சந்தைகளில் கிடைப்பதாய் இருக்கும். இதனை சுட்டும் சாப்பிடலாம், வேகவைத்தும் சாப்பிடலாம். சுட்டு சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்களானது அழிந்துவிடும். அதனால் வேகவைத்து சாப்பிடுவதே நமது உடலுக்கு முழு சத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

ரூ. 10 என்ற அளவில் விற்கும் இந்த மக்காச் சோளத்தின் நன்மைகளோ அதன் விலையினைக் காட்டிலும் பல மடங்கு அதிகம், அதாவது மக்காச் சோளமானது அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டதாக உள்ளது.

இதனால் ஒபேசிட்டி என்னும் உடல் எடை கூடும் பிரச்சினைக்கு பெரும் தீர்வாக உள்ளது, இதனால் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் மக்காச்சோளத்தினை டயட் உணவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது செரிமானப் பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஏனெனில் இது எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. மேலும் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும்.

இதனால் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளையும் இது சரி செய்வதாய் உள்ளது, மேலும் கண் பார்வைப் பிரச்சினை உள்ளவர்கள் மக்காச் சோளத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நாம் தப்பலாம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன