திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை மற்றும் அதன் ஐடி விங் வட்டாரங்களில் இருந்து சமீபகாலமாக ஒரு புதிய விவாதம் கசிந்து வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் கேலி பொருளாக மாறியிருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் பதிவுகள் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்டு வியந்துபோன திமுக மேலிடம், “நாமளும் இதேபோல இன்ஸ்டாவில தீவிரமா இறங்கி பிரபலம் ஆகுவோம், வரும் 2031 சட்டமன்றத் தேர்தல்ல இன்ஸ்டாகிராம் பக்கங்களை வச்சே ஆட்சியைப் பிடிச்சிடுவோம்” என்று ஒரு விசித்திரமான வியூகத்தை வகுத்து வருவதாகத் தெரிகிறது. அரசியல் களத்தில் மக்களின் நிஜமான பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்ப்பதை விடுத்து, வெறும் மொபைல் திரைக்குள் தங்களின் பிம்பத்தைக் கட்டமைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடலாம் என்று அவர்கள் நினைப்பது அரசியல் முதிர்ச்சியற்ற தனத்தையே காட்டுகிறது.
திமுகவின் இந்த திடீர் இன்ஸ்டாகிராம் மோகத்தை பார்க்கும் போது, கிராமப்புறங்களில் பழங்காலமாக சொல்லப்படும் “புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை” தான் ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் நினைவிற்கும் வருகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், புதிதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செய்திகளும், அதன் தலைவர் தளபதி விஜய்யின் மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்பு வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நொடிப் பொழுதில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து காட்டுத்தீயாய் வைரலாகி வருகின்றன. தவெகவின் பதிவுகள் இணையத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம், அதற்குப் பின்னால் இருக்கும் மக்களின் உண்மையான அன்பும், தன்னிச்சையாக எழும் ஒரு புதிய அரசியல் எழுச்சியுமே தவிர, திட்டமிட்டு காசு கொடுத்து உருவாக்கப்படும் விளம்பரம் அல்ல என்பதை திமுக தலைமை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அரசியல் களத்தில் தானாக உருவாகும் மக்கள் அலையையும், காசு கொடுத்து உருவாக்கப்படும் செயற்கையான விளம்பரத்தையும் திமுக ஐடி விங் ஒன்றாக குழப்பிக் கொண்டுள்ளதே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும். தவெகவின் செய்திகள் வைரலாவது போன்ற ஒரு மாயாஜாலத்தை திமுக இன்ஸ்டாகிராமில் நிகழ்த்த வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் ஒரு போஸ்ட்டுக்கு 200 ரூபாய் வீதம் லட்சக்கணக்கான போலி கணக்குகளுக்கும் சமூக ஊடக பக்கங்களுக்கும் வாரி வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பண பலத்தையும், அதிகார பலத்தையும் மட்டுமே நம்பி, ஒரு குறிப்பிட்ட தொகையை கூலியாக கொடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்ய நினைப்பது ஒருபோதும் உண்மையான மக்கள் ஆதரவாக மாறாது என்பதை ஆளுங்கட்சி மறந்துவிட்டது.
அதிநவீன தொழில்நுட்பங்களையும், கூலிக்கு ஆட்களையும் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான லைக்ஸ் மற்றும் வியூஸ் கூட்டத்தை திமுகவினால் வேண்டுமானால் தற்காலிகமாக விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால், பணத்தை பெற்று கொண்டு சமூக வலைத்தளங்களில் உங்களுக்காக புகழ்பாடும் அதே கூலிப் படையினர், வாக்குப்பதிவு நடக்கும் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது தங்களின் மனசாட்சிப்படிதான் வாக்களிப்பார்கள். இன்ஸ்டாகிராமில் காசு வாங்கிவிட்டு திமுகவிற்கு ஆதரவாக போஸ்ட் போட்ட அதே நபர், எலக்சன் அன்னிக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவெகவின் ‘விசில்’ சின்னத்திற்கு நேராகத் தங்களின் விரலை வைத்து குத்திவிட்டு வந்துவிடுவான் என்பதுதான் கள யதார்த்தம்.
டிஜிட்டல் உலகத்தில் தங்களின் பண ஆதிக்கத்தைக் காட்டி இளைஞர்களைக் கவர்ந்துவிடலாம் என்று நினைக்கும் திமுகவின் இந்தத் திட்டம் முற்றிலும் காலாவதியான ஒரு பழைய சிந்தனையாகும். இன்றைய தலைமுறை இளைஞர்கள் வெறும் 15 நொடி ரீல்ஸ்களைப் பார்த்துவிட்டு தங்களின் ஐந்தாண்டு கால எதிர்காலத்தை யாருடைய கைகளிலாவது ஒப்படைக்கும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல; அவர்கள் ஆளுங்கட்சியின் கடந்த கால செயல்பாடுகளையும், தற்போதைய மக்கள் விரோத போக்குகளையும் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி, போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கி 2031-ல் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று பகற்கனவு காண்பதை நிறுத்திவிட்டு, ஆளுங்கட்சித் தலைமை உருப்படியாக வேறு ஏதேனும் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பது நல்லது.
முடிவாக, மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கும், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பதற்கும் இடையே இருக்கும் மலை அளவு வித்தியாசத்தை திமுக புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். அதிகார பலமும் பண மூட்டைகளும் ஒருபோதும் மக்களின் உண்மையான எழுச்சிக்கு மாற்றாக இருக்க முடியாது என்பதை தவெகவின் தற்போதைய சமூக வலைத்தள அலையே நிரூபித்துக் காட்டியுள்ளது. காசு கொடுத்து பெறப்படும் லைக்குகளை நம்பி தேர்தலைச் சந்திக்க தயாராகும் திமுகவின் இந்த ‘இன்ஸ்டா வியூகம்’ தங்களின் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமமானதாகும்; எனவே “போயி வேற மாதிரி ஏதாவது உருப்படியா யோசிங்க பாஸ், ஏன்னா இது உங்களோட 60 ஆண்டுகால பழைய பருப்பு வேகுற இடமில்ல” என்பதே தற்போதைய அரசியல் கள நிலவரம் நமக்கு உணர்த்தும் பாடம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
