சீதாப்பழமானது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும், இந்தப் பழத்தில் உள்ள சத்துகள் குறித்து இப்போது பார்க்கலாம். சீதாப்பழமானது உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதாக உள்ளது, இதனால் இரத்த சோகைப் பிரச்சினையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் கட்டாயம் சீதாப் பழத்தினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் சீதாப் பழம் நினைவாற்றலை அதிகரிப்பதாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுத்தல் வேண்டும். மேலும் சீதாப் பழத்தின் தன்மையானது புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது.
பலரும் சீதாப் பழம் சாப்பிட்டால் சளிப் பிடிக்கும் என்று கருதி சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால் இது சளிப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்குமே தவிர சளியை உண்டு பண்ணாது.
இதையும் பார்க்க: கருப்பு திராட்சையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!
உடல் சூட்டினைத் தணிப்பதாக உள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். மேலும் இது ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகவும், கண் சம்பந்தப்படட் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும் உள்ளது. மேலும் இது உடலில் உள்ள கொழுப்பினைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.