பட்டாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும், இத்தகைய பட்டாணியின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
பட்டாணியானது அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனை எந்த அளவு அதிகமாக எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு சருமம் பளபளப்பாகவும், தலைமுடியின் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் தினசரிக்கு 20 மில்லி கிராம் என்ற அளவிலாவது பட்டாணியை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்
மேலும் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துவதில் பட்டாணியின் பங்கு அளப்பரியது, மேலும் பட்டாணியானது இதயத்தினை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.
மேலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், டயட் இருக்க நினைத்தால் பட்டாணியினை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், அதாவது பட்டாணியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, கெட்ட கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பட்டாணியை எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும், ஆறு மாதக் குழந்தைகளுக்கு பட்டாணியுடன் நீர் மற்றும் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து குழைய வேகவிட்டுக் கொடுக்கவும்.