அசைவப் பிரியர்களுக்கு அசைவ உணவுகளின் மேல் எவ்வளவு பிரியம் உள்ளதோ, அதற்கு இணையானதாக சைவப் பிரியர்களுக்கு காளானின் மேல் இருக்கும். காளானில் கிரேவி, குழம்பு, பொரியல், ப்ரை எனப் பலவகைகள் செய்து சாப்பிடுவர். இத்தகைய காளானின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
காளானில் அதிக அளவில் புரதச் சத்து உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
மேலும் காளான் செரிமான சக்தியினை மேம்படுத்துவதாகவும் உள்ளது, இதில் கொழுப்புச் சத்து இல்லாமல் நீர்ச் சத்தே அதிகம் உள்ளதால் டயட் உணவாக நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இது இதயத்தினைப் பலப்படுத்துவதாகவும், மலச் சிக்கலைத் தீர்ப்பதாகவும் உள்ளது. மேலும் பெண்களின் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மலட்டுத் தன்மை, மார்பகப் புற்றுநோய் வராமல் தடுத்தல் என காளானின் பங்கு சொல்லில் அடங்காதது.
மேலும் குடற்புண், தொண்டைப் புண், வயிற்றுப் புண் என ஏதேனும் புண்கள் இருப்பின் அவர்கள் நிச்சயம் காளானை சூப்பாகப் பருகி வந்தால் சிறப்பான தீர்வினைப் பெற முடியும்.
உயர் அழுத்த இரத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றோரும் நிச்சயம் காளானை எடுத்துக் கொள்ளலாம்.