ஒன்னு ரெண்டு இல்லை.. 1.75 கோடி மக்கள் உங்களை நம்பியிருக்காங்க முதல்வர் விஜய்.. உங்களிடம் இருந்து தேனும் பாலும் நாங்க எதிர்பார்க்கலை.. திராவிடங்கள் ஆரம்பிச்ச வச்ச பேனர், காரில் கொடி கட்டி அடாவடி, அதிகாரிகளை மிரட்டுவது, முதல்வர் வருகிறார் என்பதற்காக மணிக்கணக்கில் மக்களை காக்க வைப்பது, இதையெல்லாம் நிறுத்துங்கள்.. அப்புறம் லஞ்சம், ஊழலை முழுவதுமாக ஒழியுங்கள்.. இதுபோதும்.. ஒரு சாமானியனின் கோரிக்கை..!

தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் தலைமைக்கு விடுத்துள்ள திறந்த மடல் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாக…

cm vijay chair

தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் தலைமைக்கு விடுத்துள்ள திறந்த மடல் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

“மாற்றம், முன்னேற்றம், தூய்மையான அரசியல்” என்று முழங்கி அதிகாரத்திற்கு வந்துள்ள தவெக, பழைய அரசியல் கட்சிகள் செய்த அதே தவறுகளை தொடர கூடாது என்பதை அறிவுறுத்தி இருக்கிறார். பேனர் கலாச்சாரம் முதல் அதிகார துஷ்பிரயோகம் வரை மொத்தம் ஏழு முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, இவை அனைத்தும் முதல் நாளிலிருந்தே தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள், ஒரு பொறுப்புள்ள குடிமகனின் குரலாக எதிரொலிக்கின்றன.

முதலாவதாக, தமிழக அரசியலில் நீண்ட காலமாக புரையோடி போயுள்ள பேனர் மற்றும் போஸ்டர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. ஏழை தொண்டர்களின் பணத்தையும், இளைஞர்களின் நேரத்தையும் வெறும் விளம்பரங்களுக்காக வீணடிக்காமல், அந்த உழைப்பை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலவிட வேண்டும் என்பதே அவரது முதன்மையான கோரிக்கை. பிளெக்ஸ் போர்டுகள் மற்றும் கட்-அவுட்கள் போன்ற பழைய காலத்து அரசியல் அடையாளங்களை அகற்றி, ஒரு நவீன மற்றும் பாதுகாப்பான அரசியல் சூழலை முதல்வர் விஜய் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டாவதாக, சட்டத்தை மதிக்கும் அரசாக தவெக திகழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், வாகனங்களில் கட்சி கொடிகளை கட்டுவது மற்றும் விதிகளை மீறுவது போன்ற செயல்களை கடுமையாகச் சாடியுள்ளார். மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் கட்சியின் நற்பெயரை சீரழிக்கும். அதேபோல், சாலைகளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயல்கள் ஒழுக்கமற்ற அரசியலின் அடையாளங்கள் என்றும், இதனை தலைமை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பயன்படுத்தும் விதத்தில் தவெகவினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவரது அடுத்த முக்கியமான அறிவுரையாக உள்ளது. கட்சியின் பெயரை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை மிரட்டுவது, செல்வாக்கை பயன்படுத்தி விதிகளை மீறுவது மற்றும் பொதுமக்களிடம் வசூலில் ஈடுபடுவது போன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது. இது போன்ற அடிமட்ட அளவிலான ஊழல்கள் மற்றும் அராஜகங்கள் தான் ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகின்றன. எனவே, அடிமட்ட தொண்டர்கள் முதல் உயர் மட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்வதை உறுதி செய்ய கடுமையான விதிமுறைகளை தலைமை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இறுதியாக, ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதே தவெகவின் லட்சியமாக இருக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுத்தது வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்ல, அரசியல் செய்யும் முறையிலேயே ஒரு பெரிய மாற்றத்தை காண வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, ஆடம்பரமான அணிவகுப்புகள் மற்றும் அதிகார பலத்தை காட்டுவதை விடுத்து, மக்கள் நலனை முன்னிறுத்தும் எளிய மற்றும் நேர்மையான அரசியலை தவெக முன்னெடுக்க வேண்டும். இந்த மாற்றங்கள் தான் விஜய்யின் அரசை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.