பனங்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

ரூ.5 முதல் ரூ. 10 என்ற மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள்தான் பனங்கிழங்கு. இத்தகைய பனங்கிழங்கில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம். பனங்கிழங்கினை உடல் சூடு உடையவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு…

8fae8b52bad5d73c79301c9b51dc1e55

ரூ.5 முதல் ரூ. 10 என்ற மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள்தான் பனங்கிழங்கு. இத்தகைய பனங்கிழங்கில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம்.

பனங்கிழங்கினை உடல் சூடு உடையவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். மேலும் பனங்கிழங்கானது அதிக நார்ச் சத்துகளைக் கொண்டதாக உள்ளதால், இது ஒரு மிகச் சிறந்த டயட் உணவாக உள்ளது.

மேலும் பனங்கிழங்கினை அதிக அளவு எடுத்துக் கொள்ளும்போது இரும்புச் சத்தும் நிச்சயம் அதிகரிக்கும்.  மேலும் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது.

மேலும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சினையான கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு பெரும் தீர்வாக உள்ளது, மேலும் இதனை வாயு தொல்லைப் பிரச்சினை உள்ளவர்கள், இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் நிச்சயம் வாயு களையும்.

மேலும் பனங்கிழங்கினை வேகவைத்து அப்படியும் சாப்பிடலாம், அதனை அரைத்து அதில் கஞ்சி அல்லது பாயசம் காய்ச்சியும் குடிக்கலாம். மேலும் பித்தம், கபம் பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கினை வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு சிறந்த தீர்வாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன