டெஸ்ட் மேட்ச் போல் இருந்த தேர்தலை 20-20 தேர்தல் போல் விறுவிறுப்பாக மாற்றியவர் விஜய்.. வாக்களிக்கும் முன் ஊழல், வாரிசு அரசியல், போதை கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பை ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள்.. நாளை நீங்கள் குத்தபோகும் ஓட்டு எதிர்கால தலைமுறையின் விதியை எழுத போகும் ஆயுதம்.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவுகள்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மாபெரும் போர்க்களமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு நிதானமான ‘டெஸ்ட் மேட்ச்’ போல இருக்கும், ஆனால் இன்று அது விறுவிறுப்பான ’20-20′ கிரிக்கெட் போட்டி…

vijay velvom

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மாபெரும் போர்க்களமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு நிதானமான ‘டெஸ்ட் மேட்ச்’ போல இருக்கும், ஆனால் இன்று அது விறுவிறுப்பான ’20-20′ கிரிக்கெட் போட்டி போல அதிவேகமாக மாறிவிட்டது. குறிப்பாக பிரச்சாரத்தின் இறுதி நேரத்தில் அரசியல் கட்சிகள் காட்டும் வேகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் மக்களை பரிதவிக்க விட்டுவிட்டு, தேர்தல் வரும்போது மட்டும் “சங்கரா சங்கரா” என்று மக்களிடம் தஞ்சம் புகுவது ஒரு ஆரோக்கியமான அரசியலல்ல. இந்தத் தேர்தல் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதும், சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்திலிருந்து இளைஞர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதுமே பிரதானமான எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆளுங்கட்சியான திமுக, தாங்கள் கொண்டு வந்த திட்டங்களான மகளிருக்கான 1,000 ரூபாய் உரிமைத்தொகை மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறது. இருப்பினும், ஒரு பக்கம் 1,000 ரூபாய் கொடுத்துவிட்டு, மறுபக்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் விட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மகளிருக்குத் தேவை 1,000 ரூபாய் காசு மட்டுமல்ல, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் தான். இரண்டு வயதுக் குழந்தை முதல் 80 வயதுப் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு சூழலில், வெறும் இலவசங்கள் மட்டுமே ஒரு சமூகத்தை மேம்படுத்திவிடாது. போதையின் பிடியில் சிக்கி மனிதர்கள் மிருகங்களாக மாறி வருவதை தடுப்பதே ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மற்றும் அதிகார பகிர்வு குறித்து ஒரு தவறான பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் போட்டி என்று கூறுவது ஒரு பொய் பிரச்சாரமே தவிர வேறில்லை. அரசியலமைப்பு சட்டப்படி 70 சதவீதத்திற்கும் அதிகமான அதிகாரங்கள் மத்திய அரசின் கைகளிலேயே உள்ளன. மாநில சுயாட்சி பற்றி பேசுபவர்கள், கச்சத்தீவை தாரைவார்த்த போது எங்கே போனார்கள் என்கிற கேள்வி எழுகிறது. மாநில உரிமைகளுக்காக போராடுவது என்பது வேறு, தங்களின் தோல்விகளை மறைக்க மத்திய அரசுடன் சண்டையிடுவது போல ஒரு பாவனையை உருவாக்குவது வேறு. இத்தகைய “நெரேட்டிவ்” அரசியல் இனி மக்களிடம் செல்லுபடியாகாது என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தக்கூடும்.

தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் என்பது ‘கலவரமாக’ இருப்பதற்கு காரணம் விஜய்யின் வருகைதான். கடந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுகவின் டிடிவி தினகரன் “கிங் மேக்கராக” இருந்து பல தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை தீர்மானித்தார். ஆனால் இந்த முறை விஜய் என்கிற புதிய சக்தி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கலைக்கப் பார்க்கிறார்.

விஜய்க்கு இருக்கும் 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி என்பது அவர் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளால் வந்ததல்ல, மாறாக அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினால் வந்தது. அதே சமயம், தவெக-வின் தேர்தல் அறிக்கையில் திமுக, அதிமுகவை விடவும் அதிகமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு பெரிய ஏமாற்றமே. திராவிட கட்சிகள் இலவசங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை விஜய்யை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு வாக்குறுதிகள் அள்ளி தெளிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை யார் பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார். ஸ்டாலின் தனது மகனை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு ஓய்வு பெற நினைக்கும் அதே வேளையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை போன்றவர்கள் கடும் சவால்களை கொடுத்து வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்து, வெறும் இலவசங்களுக்கு ஆசைப்படாமல் தமிழகத்தின் நீண்டகால நலனை கருதி வாக்களிப்பதே இந்த தேர்தலின் சுவாரசியமான திருப்பமாக அமையும்.