நல்லெண்ணெயினை நாம் சமையலுக்குப் பயன்படுத்தி வருவது வழக்கம், ஆனால் அதன் நன்மைகள் குறித்து நாம் தெரிந்திருப்பதில்லை, இப்போது நாம் நல்லெண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நல்லெண்ணெயின் அடர்த்தியானது மிகவும் அடர்த்தி குறைவாக இருப்பதால், இதனால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, மேலும் இது எலும்புகளை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.
நல்லெண்ணெய் உடல் சூட்டினைக் குறைப்பதாக இருப்பதால் கட்டாயம் உடல் சூடு கொண்டவர்கள் நிச்சயம் சாப்பிட்டால் உடல் சூடானது நிச்சயம் குறையும்.
மேலும் நல்லெண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடும்போது சருமத்தில் உள்ள வறட்சித் தன்மையானது மாறும், மேலும் தொலைனை மென்மையாக ஆக்கச் செய்வதாக உள்ளது.
மேலும் கர்ப்பிப் பெண்கள் பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் தழும்புகளை காணாமல் போகச் செய்ய நல்லெண்ணெயைக் கொண்டு வயிற்றில் மசாஜ் செய்தால் தழும்புகள் காணாமல் போகும்.
மேலும் நல்லெண்ணெய் ஆனது மஞ்சள் கறைபடிந்த பற்களை வெண்மையாக மாற்றும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இது சிறுநீரகப் பிரச்சினைகளை சரிசெய்வதாக உள்ளது, மேலும் உடல் சூடு கொண்டவர்கள் அடி வயிறு மற்றும் உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியாகும்.