எங்களை மீறி ஒரு கப்பல் கூட ஈரானுக்கு போக கூடாது, ஈரானில் இருந்து கிளம்ப கூடாது… ஹார்முஸ் ஜலசந்தி சுற்றி வளைத்த அமெரிக்க கப்பல் படை.. இது ஒரு ஆரம்பம்தான்… ஆழ்கடல்ல கப்பலை ஏறி பிடிக்கிறதுதான் அடுத்த லெவல் கேம். ஈரான் ஏதாவது சேட்டை பண்ணினா கடலே ரத்தமா மாறும்! அமெரிக்க கப்பல் படை எச்சரிக்கை..!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் மோதல் போக்கு, இனி உலகளாவிய அளவிலான ஒரு நேரடி மோதலாக வெடிக்கக்கூடும்…

usa navy

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் மோதல் போக்கு, இனி உலகளாவிய அளவிலான ஒரு நேரடி மோதலாக வெடிக்கக்கூடும் என்பதை சமீபத்திய நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களை இடைமறித்து சோதனையிடவும், தேவைப்பட்டால் அவற்றை கைப்பற்றவும் அமெரிக்க இராணுவம் தீவிரமாக தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை அடுத்த சில நாட்களிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்கக் கூட்டு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் டான் கெய்ன், ‘எகனாமிக் ஃபியூரி’ என்ற பெயரிலான இந்த புதிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானிய கொடி ஏந்திய கப்பல்கள் அல்லது ஈரானுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா தீவிரமாக பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, சர்வதேச தடைகளை மீறி ஈரானிய எண்ணெயை கடத்தும் ‘டார்க் பிளீட்’ எனப்படும் சட்டவிரோத கப்பல்களை குறிவைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இவை காப்பீடு அல்லது முறையான விதிமுறைகள் இன்றி இயங்கும் கப்பல்கள் என்பதால், அவற்றை கட்டுப்படுத்துவது சர்வதேச பொருளாதார தடைகளை வலுப்படுத்தும் ஒரு வழியாக அமெரிக்கா கருதுகிறது.

இந்த இராணுவ நடவடிக்கை வெறும் ஹார்முஸ் ஜலசந்தியுடன் மட்டும் நின்றுவிடாமல், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் உதவியுடன் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் அமெரிக்க கடற்படை ஏற்கனவே முற்றுகையிட்டுள்ளது.

ஈரானிய துறைமுகங்களில் இருந்து வெளியேற முயன்ற 23 கப்பல்களை அமெரிக்க மத்திய கட்டளையகம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இனிவரும் நாட்களில் கடலில் வைத்து கப்பல்களை கைப்பற்றும் நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

மறுபுறம், ஈரான் தனது இராணுவ வலிமையை பயன்படுத்தி ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ‘கடுமையான கட்டுப்பாட்டை’ மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. நேற்று அந்த குறுகிய நீர்வழிப்பாதையை கடக்க முயன்ற பல கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இரண்டு இந்திய கப்பல்களும் அடங்கும் என புகார்கள் எழுந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வணிக போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்த அடுத்த சில மணிநேரங்களிலேயே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா எடுத்துள்ள ‘நேரடித் தலையீடு’ என்ற முடிவு, ஒரு மிகப்பெரிய இராணுவ மோதலுக்கு வித்திடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் பெரும் பகுதி கச்சா எண்ணெய் கடத்தப்படுகிறது என்பதால், இந்த தடைகளும் தாக்குதல்களும் உலகளாவிய எரிபொருள் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈரான் தனது கடல் எல்லையை பாதுகாப்பதாக கூறி தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபடுவதும், அதற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானிய கப்பல்களை கைப்பற்ற துணிவதும், வல்லரசு நாடுகளுக்கிடையேயான ஒரு நேரடி போராக மாற வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.