பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்காதது ஏன்? சீக்ரெட்டை அவிழ்த்த சரத்குமார்!

தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படுபவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களில் கருத்து இருக்கும். ஆனாலும் அதில் காமெடி தூக்கலாக இருக்கும். முருங்கைக்காய் என்று சொன்னாலே அங்கு பாக்கியராஜ் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு…

தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படுபவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களில் கருத்து இருக்கும். ஆனாலும் அதில் காமெடி தூக்கலாக இருக்கும். முருங்கைக்காய் என்று சொன்னாலே அங்கு பாக்கியராஜ் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு முந்தானை முடிச்சு படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. திரைக்கதை மன்னன் என்று பாக்கியராஜை அழைக்க என்ன காரணம்னா அவர் எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும் வகையில் சிக்கலான கதையையும் அழகாக சொல்வதில் வல்லவர்.

அவரது படங்களில் அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாத வகையில் டுவிஸ்ட் வைத்து அழகாக நகர்த்திச் செல்வார். அது மட்டும் இல்லாமல் கிளைமாக்ஸில் எப்படி தான் இந்தக் கதையை முடிப்பாரோ? சிக்கலான கதையின் முடிச்சை எப்படி அவிழ்ப்பாரோ என்று ஆர்வமுடன் பார்க்கத் தூண்டும் வகையில் இருக்கும். அதனால் தான் அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றி வாகை சூடின. இவர் படத்தில் சரத்குமார் இதுவரை நடிக்கவே இல்லை. அது ஏன் என்று தற்போது வாய் திறந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

பாக்கியராஜ் சார் இயக்கத்திலோ, கதை வசனத்திலோ எதிலயுமே நான் நடிக்கல. ஆனா ஒரே ஒரு முறை என்னை அழைத்து கதை சொல்லி இருக்கிறார். அந்தக் கதையை சொல்லி கேட்ட போது என்னால அதை முடிக்க முடியவில்லை. ஆனால் 50 வருஷமாக தமிழ்த்திரை உலகில் இருந்து வருகிறார். அது மிகப்பெரிய விஷயம். அதுவும் எழுத்துக்கள் மூலமாக. இப்பவும் ஒண்ணும் லேட்டா இல்ல. பாக்கியராஜ் சார் எனக்காக கதை எழுதுனார் என்றால் நான் அவருடன் சேர்ந்து நடிக்க காத்துக்கொண்டு இருக்கிறேன் என்கிறார் சரத்குமார்.