மிரட்டினா பின்வாங்கி போகிற சூப்பர் ஸ்டார் இல்லை.. தடை கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி பாதையில் பயணிக்க போகிற மக்கள் தளபதி விஜய்.. நீ எவ்வளவு இடைஞ்சல் வேனும்னாலும் கொடுத்துக்கோ.. அதுக்கெல்லாம் சேர்த்து மே 4க்கு அப்புறம் திருப்பி கொடுப்போம்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் மலர தொடங்கும்போது, அதனை தடுத்து நிறுத்த பழைய அதிகார மையங்கள் கைகோர்ப்பது ஒன்றும் புதியதல்ல. ‘விஜய்’ எனும் தனிப்பெரும் ஆளுமையை தேர்தல் களத்தில் முடக்குவதற்காக தமிழகத்தின்…

vijay campaign1

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் மலர தொடங்கும்போது, அதனை தடுத்து நிறுத்த பழைய அதிகார மையங்கள் கைகோர்ப்பது ஒன்றும் புதியதல்ல. ‘விஜய்’ எனும் தனிப்பெரும் ஆளுமையை தேர்தல் களத்தில் முடக்குவதற்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து வியூகங்களை வகுக்கின்றன. இந்த விஷயத்தில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா, ராகுல் காந்தி, சீமான் உள்பட பலர் இணைந்துள்ளனர்.

ஆனால், ஒரு தனிமனிதரை சிதைக்க தீட்டப்படும் திட்டங்கள் எதுவுமே, அவர் பின்னால் அணிவகுத்து நிற்கும் மக்களின் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவிற்கு முன்னால் தவிடு பொடியாகிவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஜனநாயகத்தின் உண்மையான பலம் என்பது சில தலைவர்கள் மூடிய அறைக்குள் அமர்ந்து போடும் கணக்குகளில் இல்லை; அது சாமானிய மனிதர்களின் நம்பிக்கை கணக்கில் தான் இருக்கிறது. வளர்ந்து வரும் ஒரு தலைவரை முளையிலேயே கிள்ளி எறியவும், அவரை அரசியல் ரீதியாக ஒழிக்கவும் சூழ்ச்சிகள் வலைபின்னப்பட்டால், நீதியை விரும்பும் தமிழக மக்கள் அதனை ஒருபோதும் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

அரசியலில் ஒருவரை வீழ்த்துவதற்கு பல நேர்மையான வழிமுறைகள் உள்ளன. கொள்கை ரீதியாகவும், மக்கள் நல திட்டங்கள் மூலமாகவும் ஒருவரை விஞ்சி நிற்பதுதான் உண்மையான அரசியல் பண்பாடு. எதிரியை நேருக்கு நேர் சந்தித்து, மக்கள் மன்றத்தில் விவாதித்து, அவர்களின் ஆதரவோடு ஒருவரை வீழ்த்தினால் அது வரலாற்றில் ஒரு கௌரவமான அடையாளமாக பதியப்படும். அதைவிடுத்து, அதிகார பலத்தை பயன்படுத்தியோ மறைமுக சதி வேலைகள் மூலமோ ஒருவரை வீழ்த்த முற்பட்டால், அத்தகைய செயல்பாடுகள் ஒருபோதும் மக்கள் அங்கீகாரத்தை பெறாது.

இத்தகைய அரசியல் சூழ்ச்சிகள் ஒரு தலைவனின் பயணத்தை தற்காலிகமாக தாமதப்படுத்தலாமே தவிர, அவனது இலக்கை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. உண்மையில், ஒரு நேர்மையான தலைவன் மீது ஏவப்படும் ஒவ்வொரு அநீதியான அம்பும், அவனை மக்கள் மத்தியில் இன்னும் பெரிய ஹீரோவாக உருவகப்படுத்தும்.

விஜய்யை பொறுத்தவரை, அவர் எத்தகைய சவால்களையும் கண்டு அஞ்சி ஒதுங்குபவர் அல்ல என்பதை தனது ஒவ்வொரு நகர்விலும் நிரூபித்து வருகிறார். பலமான கட்டமைப்புகளை கொண்ட ஆளுங்கட்சிகளையும், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த அதிகார மையங்களையும் ஒரே நேரத்தில் எதிர்த்து நிற்பது என்பது ஒரு புதிய தலைவருக்கு இமாலய சவாலாகும். அந்த சவாலை அவர் மிகுந்த நிதானத்தோடும் புன்னகையோடும் எதிர்கொள்வது, அவரது எதிரிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றத்திற்கான கதவுகள் தட்டப்படும் இந்த வேளையில், புதிய காற்றை சுவாசிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அதிகாரத்தின் பலத்தை கொண்டு ஒரு மக்கள் தலைவனை முடக்க நினைப்பவர்கள், மக்களின் சக்தியை மிக குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்.