கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசியலில் மிக துல்லியமான கருத்துக்கணிப்புகளை வழங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள சமீபத்திய சர்வே முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த இருமுனை போட்டி என்பது மறைந்து, ஒரு மும்முனை போட்டி நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆளும் திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்றும், அக்கட்சி வெறும் 40 முதல் 50 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் இந்த சர்வே தெரிவிக்கிறது. இது திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பல தொகுதிகளில் மக்கள் மாற்றத்தை விரும்புவதையே காட்டுகிறது.
மறுபுறம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 100 முதல் 110 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்று இந்த கணிப்பு கூறுகிறது. அதேசமயம், முதல் தேர்தலிலேயே அதிரடி காட்டும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 70 முதல் 75 இடங்களை பிடித்து, தமிழக அரசியலின் ‘கிங் மேக்கராக’ மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், தமிழகத்தில் ஒரு ‘தொங்கு சட்டசபை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. 1952-க்குப் பிறகு தமிழகம் சந்திக்கப்போகும் மிக முக்கியமான அரசியல் நெருக்கடியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த கணிப்பில் உள்ள மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவப்போகும் அரசியல் இழுபறிதான். அதிமுக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க சுமார் 8 முதல் 18 இடங்கள் வரை தேவைப்படும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக அவர்களுக்கு ஆதரவு அளிக்க முன்வருமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்த சர்வேயின் உட்பிரிவு தகவல்களின்படி, விஜய் தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார் என்றும், அவர் அதிமுகவுக்கோ அல்லது திமுகவுக்கோ ஆதரவு அளித்து ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கேற்க விரும்பமாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நீடிக்கும்.
ஆட்சி அமைக்க எவருமே முன்வராத அல்லது ஆதரவு கிடைக்காத இத்தகைய சூழலில், தமிழகத்தில் ‘மறுதேர்தல்’ நடப்பது உறுதி என்று இந்த ஆய்வு நிறுவனம் எச்சரிக்கிறது. தமிழக மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்காத நிலையில், ஒரு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் மற்றும் மக்களின் மனநிலை மாற்றங்கள், மறுதேர்தலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வரலாற்றில் இது போன்ற மறுதேர்தல்கள் பெரும்பாலும் ஒரு புதிய எழுச்சிக்கே வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுதேர்தல் நடக்கும் பட்சத்தில், அது தமிழக வெற்றி கழகத்திற்கு அல்லது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று இந்த 30 வருட அனுபவம் கொண்ட நிறுவனம் கணித்துள்ளது. மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது, மக்கள் ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கில், தவெக அல்லது அதிமுக ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கு பெரும்பான்மை பலத்தை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் ஆதரவை முழுமையாக பெற்றுள்ள விஜய், மறுதேர்தலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை நிகழ்த்தி அரியணையில் ஏறுவார் அல்லது எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்பதே இந்த நீண்டகால ஆய்வின் இறுதி முடிவாக உள்ளது. மே 4-ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசியல் எந்த திசையில் பயணிக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தேசமே காத்திருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
