ரோடுல பள்ளம் தோண்டி விஜய் பயணத்தை தடுக்கலாம்னு நினைக்காதீங்க… அந்த பள்ளத்தை விட ஆழமா மக்கள் மனசுல பதிஞ்சிருக்காரு! இன்னைக்கு பள்ளம் தோண்டுற நீங்கதான், நாளைக்கு அவர் வரும்போது பன்னீர் தெளிச்சு வரவேற்க போறீங்க! நேத்து வரை நல்லா இருந்த ரோடு, விஜய் வர்றார்னா மட்டும் திடீர்னு உள்வாங்குதா? நீங்க எத்தனை குழிய தோண்டுனாலும், அதுல உங்க அரசியலை புதைக்க வருவாரு எங்க தலைவரு.. தவெகவினர் ஆவேசம்..

சென்னை பெரம்பூர் முல்லைய் நகர் சந்திப்பில் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

perambur

சென்னை பெரம்பூர் முல்லைய் நகர் சந்திப்பில் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி, இந்த பகுதியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அந்த சமயத்தில் மிகவும் அவசரம் அவசரமாக, சாலைகள் அனைத்தும் பலபலவென புதிய தார் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. நேற்றிரவு வரை எவ்வித பிரச்சனையும் இன்றி சீராக இருந்த சாலையில், விஜய் அந்தபகுதிக்கு வருகிறார் என்றவுடன் திடீரென பெரிய பள்ளம் தோன்றியது அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், “மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்காக இந்த சாலை அவசர அவசரமாக போடப்பட்டது. நேற்றிரவு நான் இந்த பாதையை கடந்து செல்லும் போது கூட சாலை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இன்று காலையில் பார்த்தால் திடீரென ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. அதற்குள் இறங்கினால் ஆளே தெரியமாட்டார்கள் அந்த அளவிற்கு ஆழமாக இருக்கிறது” என அவர் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

சாலை துண்டிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அந்த பள்ளத்தைச் சுற்றி உடனடியாக போக்குவரத்துத் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளம் இயற்கையாக உருவானதா அல்லது ஏதேனும் பராமரிப்பு பணிகளுக்காக தோண்டினார்களா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. ஆனால், அதிகாரிகள் தோண்டியிருந்தால் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். திடீரென தடுப்புகள் முளைத்திருப்பது, விஜய்யை வர விடக்கூடாது என்று திட்டமிட்டு செய்யப்பட்டது போல் இருக்கிறது என்பதே தவெகவினரின் குற்றச்சாட்டு.

விஜய் கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டே வேண்டுமென்றே ஒரு பள்ளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அதிகாரிகள் தரப்பில் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விஜய்யை இப்போது வேண்டுமானால் அதிகாரிகள் தடுக்கலாம், ஆனால் அடுத்த 2 மாதங்களில் அவர் பெரம்பூர் எம்.எல்.ஏவாக, தமிழகத்தின் முதல்வராக வரும்போது அதே அதிகாரிகள் அவருக்கு சல்யூட் அடிப்பார்கள் என்று தவெகவினர் கூறி வருகின்றனர்.