அமெரிக்கா எங்கள தொட்டுருச்சு.. தொட்டவன நாங்க விட்டதே இல்லை.. அமெரிக்காவுக்கு போறது சீன கப்பலாக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் கப்பலாக இருந்தாலும் சரி, நட்புன்னு பாக்காம அடிப்போம்.. இந்தியா மட்டும் தான் எங்க ரூல்ஸை ஃபாலோ பண்ணுது.. மத்த எந்த நாட்டு கப்பல் வந்தாலும் ‘ஹார்முஸ் ஜலசந்தியில ஜலசமாதிதான்.. ஈரான் எச்சரிக்கை..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஈரானின் நெருங்கிய நட்பு நாடாக கருதப்படும் சீனாவின் சரக்கு கப்பல்களையே ஈரான் தடுத்து…

china ship

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஈரானின் நெருங்கிய நட்பு நாடாக கருதப்படும் சீனாவின் சரக்கு கப்பல்களையே ஈரான் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது சர்வதேச அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘காஸ்கோ’ போன்ற உலகின் முன்னணி சீன கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், தாங்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த வேளையில், ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ அருகே வந்த சீனக் கப்பல்கள் திடீரென ‘யூ-டர்ன்’ அடித்து திரும்பியது செயற்கைக்கோள் தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

சீனா ஈரானுக்கு ஏவுகணைகள், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கி பெரும் ஆதரவு அளித்து வந்தாலும், ஈரான் தனது கொள்கையில் பிடிவாதமாக இருப்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. குறிப்பாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை , நட்பு நாடுகளின் கப்பல்கள் என்றாலும் அவை ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அவர்களது கூட்டாளிகளுக்கு சொந்தமான பொருட்களை ஏற்றி செல்லவோ அல்லது அந்த நாடுகளுக்கு செல்லவோ அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. சீன கப்பல்கள் சர்வதேச சந்தையில் அனைத்து நாடுகளுடனும் வர்த்தகம் செய்வதால், ஈரான் எதிரி நாடுகளுக்கு செல்ல முயன்றபோது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ‘சிஎஸ்-சிஎல் இந்தியன் ஓஷன்’ மற்றும் ‘சிஎஸ்-சிஎல் ஆர்டிக் ஓஷன்’ ஆகிய பிரம்மாண்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கியபோது, ஈரானிய படையினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதேபோல், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தற்போது தீப்பற்றி கரை தட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களை ஈரானின் மிக நெருங்கிய நண்பர்களாக காட்டிக்கொண்டு சில விதிமீறல்களை செய்ய முயன்றபோது, ஈரான் அவர்களுக்கு கடும் எச்சரிக்கையை வழங்கியுள்ளது.

இந்தச் சூழலில் இந்தியாவின் அணுகுமுறை மிகவும் முதிர்ச்சியுடனும் ராஜதந்திரத்துடனும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்திய கப்பல்கள் ஈரானின் நிபந்தனைகளை சரியாக பின்பற்றுவதோடு, தேவையற்ற விளம்பரங்களை தவிர்த்து அமைதியான முறையில் பயணிக்கின்றன. இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது ஈரானிய கடற்படையின் உதவியுடன் வெளியேறுவதும், பின்னர் இந்திய கடற்படை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் ஒரு சுமூகமான உறவை உறுதி செய்துள்ளது. சீனா போன்ற நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முயன்ற இடத்தில், இந்தியா தனது ராஜதந்திரத்தின் மூலம் தடையின்றி வர்த்தகத்தைத் தொடர்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், ஈரான் தனது பிராந்திய இறையாண்மையை காக்க எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டது. தனது நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் கப்பல்களையே தடுத்து நிறுத்துவதன் மூலம், “எங்கள் விதிமுறைகளை மீறினால் யாராக இருந்தாலும் அனுமதி இல்லை” என்கிற தெளிவான செய்தியை உலகிற்கு ஈரான் சொல்லியுள்ளது. இது சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கப்பல் போக்குவரத்து நிறுவனங்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறுதியாக, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்த பதற்றம் உலக பொருளாதாரத்தை உலுக்கி வருகிறது. ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தகத்தில் ஒரு நாடு எவ்வளவு வலிமையாகத் தனது புவிசார் அரசியலை பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளது. சீனாவின் ராணுவ உதவி ஈரானுக்கு தேவைப்பட்டாலும், தனது கொள்கையில் சமரசம் செய்துகொள்ள ஈரான் தயாராக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த மோதல் போக்கு அடுத்தகட்டமாக எங்கு செல்லும் என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்தே அமையும்.