சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் எல்லாரும் என் கூட வாங்க.. மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க போர்க்கப்பலை அனுப்புங்க.. நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்.. ஆனால் ஒருத்தரும் கண்டுக்கவே இல்லை.. யாரை வேனும்னாலும் துணைக்கு கூப்பிடு.. ஹார்முஸ் ஜலசந்தி பக்கம் எவனாவது வந்தீங்க சாம்பல் கூட கிடைக்காது.. ஹார்முஸ் ஜலசந்தியில ஈரானோட அனுமதி இல்லாம ஒரு அணு கூட அசையாது, அமெரிக்காவை நம்பி எவனாவது வந்தா கதம் கதம் தான்..! ஈரான் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது.…

hormuz2

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நட்பு நாடுகளுக்கு ஒரு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த பாதையை பாதுகாப்பாக திறந்து வைக்க நட்பு நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எந்த வழியிலாவது ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்று அவர் சூளுரைத்துள்ளது, இப்பகுதியில் ஒரு மிகப்பெரிய கடற்போர் வெடிப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

போர்க்களத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஈராக்கின் எர்பில் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளை இந்த பாதுகாப்பு பணியில் இணையுமாறு கேட்டு கொண்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அந்த பாதையை பாதுகாப்பதிலும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே டிரம்பின் நிலைப்பாடாக உள்ளது. ஈரான் தனது கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்த முயன்றால், அமெரிக்கா ஈரானின் கடற்கரை நெடுகிலும் மிகக்கடுமையான குண்டுவீச்சுகளை நடத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். “இது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இந்த பாதையை விரைவில் திறக்கும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஈரான் இப்போதும் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு, எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறது. குறிப்பாக, இந்தியா, சீனாவை போன்ற நாடுகளின் கப்பல்கள் இன்னமும் ஜலசந்தியை கடந்து செல்வது, ஈரான் ஒருசில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே இந்த தடையை அமல்படுத்தியுள்ளதை காட்டுகிறது. இது அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு ஈரான் கொடுக்கும் பதிலடியாகும்.

இராணுவ ரீதியாகப் பார்க்கும்போது, ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரானுக்கு சாதகமான ஒரு ‘கில் பாக்ஸ்’ போன்றது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மிக குறுகிய அந்த பாதையில் நுழையும் அமெரிக்க போர்க்கப்பல்கள், ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு எளிதான இலக்குகளாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இதனாலேயே அமெரிக்க கடற்படை நேரடியாக அங்கு நுழைய தயங்குவதாகவும், அதற்காகவே டிரம்ப் நட்பு நாடுகளின் உதவியை கோருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மொத்தத்தில் மத்திய கிழக்கில் நடக்கும் இந்த போர் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முயல்கிறது; மறுபுறம் ஈரான் தனது புதிய தலைமையின் கீழ் எதற்கும் துணிந்த நிலையில் உள்ளது. இந்த இரண்டையுமே உலக நாடுகள் கவலையுடன் உற்று நோக்கி வருகின்றன.