பவன் கல்யாண் மட்டுமல்ல.. ஒரு படையையே களத்தில் இறங்கிய அமித்ஷா.. எப்படியாவது விஜய்யை கூட்டிட்டு வந்துருங்க.. களத்தில் 2 ஆந்திர தொழிலதிபர்கள்.. துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமான ஜெகதீஷ், ஒரு ஐஏஎஸ் அதிகாரி.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், விஜய் கரைய மாட்டாரா? இவ்வளவு தூரம் அன்பா சொல்லி கேட்கலைன்னா, அதுக்கு அப்புறம் இருக்கவே இருக்குது சிபிஐ.. மிரட்டி பணிய வைக்கவும் பிளான் பி அமித்ஷாவிடம் இருக்குதா?

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யை கொண்டுவர டெல்லி…

vijay pawan amitshah

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யை கொண்டுவர டெல்லி மேலிடம் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை தூதராக பா.ஜ.க பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. விஜய்யும் பவன் கல்யாணும் நீண்டகால நண்பர்கள் என்பதால், பவன் மூலமாக பேசினால் பலன் கிடைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. சமீபத்தில் விஜய்யை தொடர்புகொண்ட பவன் கல்யாண், தனது குடும்ப அரசியல் அனுபவங்களை முன்வைத்து மிகவும் உருக்கமாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது அண்ணன் சிரஞ்சீவி 2009-ல் ‘பிரஜா ராஜ்ஜியம்’ கட்சியை தொடங்கியபோது நிலவிய பிரம்மாண்டமான சூழலையும், இறுதியில் தேர்தல் களத்தில் சந்தித்த பின்னடைவுகளையும் பவன் கல்யாண் சுட்டிக்காட்டியுள்ளார். பத்து லட்சம் பேர் கூடியும், வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்பதையும், இறுதியில் கட்சியை காங்கிரஸுடன் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையும் அவர் விஜய்க்கு விளக்கியுள்ளார். அரசியலில் தனித்து போட்டியிடுவது என்பது எவ்வளவு பெரிய சவாலானது என்பதையும், தானும் கடந்த காலங்களில் தோல்விகளை சந்தித்து, இப்போது கூட்டணி அமைத்ததால்தான் துணை முதல்வர் நிலைக்கு உயர முடிந்தது என்பதையும் அவர் விஜய்க்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

விஜய் தனித்துப் போட்டியிட்டால் மிகக்குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற முடியும் என்றும், மீண்டும் தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் அது த.வெ.க-வின் எதிர்காலத்தை சிதைத்துவிடும் என்றும் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்படுவதே புத்திசாலித்தனம் என்றும், அப்படி செய்யும்பட்சத்தில் துணை முதல்வர் பதவி உட்பட மத்திய அரசின் முழு ஆதரவும் விஜய்க்கு தடையின்றிக் கிடைக்கும் என்றும் அவர் ‘டீல்’ பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த விஜய், தனது கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு நெருக்கமான ஆந்திரத் தொழிலதிபர்கள் இருவர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி மூலம் அவரை சந்தித்துள்ளனர். தேர்தலுக்கான நிதி நெருக்கடிகளை தாங்கள் முழுமையாக பார்த்து கொள்வதாகவும், கூட்டணிக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டுங்கள் என்றும் அவர்கள் விஜய்க்கு உறுதி அளித்துள்ளனர். அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமான விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் என பல முனைகளிலும் விஜய்யின் மனதை கரைக்கப் பா.ஜ.க தரப்பு காய்களை நகர்த்தி வருகிறது. அமித்ஷாவுக்கு நெருக்கமான பிரமுகர்களும் இதில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க-வின் இந்த அழுத்தங்களுக்குப் பின்னால் ஒரு ‘மிரட்டல்’ அரசியலும் ஒளிந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் ஆசை வார்த்தைகளை காட்டி அழைக்கும் பா.ஜ.க, இன்னொரு புறம் விஜய்யை வழிக்கு கொண்டு வர விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, கரூர் துயர வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக சொல்லி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது, அவரை ஒருவித நெருக்கடிக்குள் தள்ளி தங்களுக்கு சாதகமான முடிவை எடுக்க வைப்பதற்கான ஒரு தந்திரம் என்றே பார்க்கப்படுகிறது. அன்பாகவும் அதே சமயம் அதிகாரத்தை பயன்படுத்தியும் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்கப் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

விஜய் இப்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளார். தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தனித்து போட்டியிட வேண்டுமா அல்லது நடைமுறை அரசியலுக்கு ஏற்ப கூட்டணி அமைத்து தனது கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் அவர் இருக்கிறார். பா.ஜ.க விரித்துள்ள இந்த வலைக்குள் விஜய் விழுவாரா அல்லது தனது தனித்துவத்தை பேணி பாதுகாப்பாரா என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மிகப்பெரிய கேள்வி. விஜய்யின் ஒரு சிறு முடிவு தமிழகத்தின் 2026 தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்பதால், அரசியல் வட்டாரங்கள் அனைத்தும் அவரின் அடுத்த அறிவிப்பை நோக்கி தவம் கிடக்கின்றன.