மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவேக் ருதியா (65) என்பவர் சமீபத்தில் தனது வீட்டில் இருந்த பழைய சொத்து ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு ஆவணம் சிக்கியது. அதில், 1917ம் வருடம் ஜூன் 4ம் தேதி முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது விவேக்கின் தாத்தா சேத் ஜூமாலால் ருதியா இங்கிலாந்து அரசுக்கு 35 ஆயிரம் கடன் கொடுத்திருப்பது தொடர்பான ஆவணம் அது. அதேநேரம், இங்கிலாந்து அரசு அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுத்த எந்த ஆவணமும் அங்கே இல்லை. எனவே,அந்த கடனை தனது தாத்தா இங்கிலாந்து நாட்டிடமிருந்து வாங்கவில்லை என்பதை விவேக் புரிந்துகொண்டார்.
விவேக்கின் தாத்தா 1937ம் வருடம் இறந்துவிட, இங்கிலாந்து அரசு 1947ம் வருடம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு இந்தியாவை விட்டே சென்றுவிட்டனர். 109 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், 5.5 சதவீத வட்டி போட்டாலே கடனின் மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல் வரும் எனத்தெரிகிறது.
எனவே, நீதிமன்றம் மூலம் சட்டப்போராட்டம் நடத்தி இங்கிலாந்து அரசிடமிருந்து 10 கோடி பணத்தை வாங்க முடியுமா என வழக்கறிஞர்களுடனும், சட்ட நிபுணர்களிடமும் ஆலோசித்து வருகிறார் விவேக் ருதியா.
