நான் மட்டும் தலையிடனா பாகிஸ்தான் அதிபர் போய் சேர்ந்திருப்பார்… டிரம்ப் பேச்சு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்பு உள்ளிட்ட அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருவதோடு, அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களையும் கூறி வருகிறார். இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகப்படியான வரிகளையும்…

donald trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்பு உள்ளிட்ட அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருவதோடு, அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களையும் கூறி வருகிறார். இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகப்படியான வரிகளையும் விதித்து வருகிறார்.

ஒருபக்கம் ‘நான் பல நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியிருக்கிறேன். எனவே எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் கூறினார். ஆனால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாமல் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.  காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சில இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அதன்பின், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது. பாகிஸ்தானின் சில தீவிரவாத குழுக்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதில், சில தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அதன்பின், அமெரிக்கா இதில் தலையிட்டதால் போர் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. டொனால்ட் டிரம்பும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரையும் நான்தான் தடுத்து நிறுத்தினேன் என பலமுறை கூறிவிட்டார். ஆனால், இந்தியாவோ அதை மறுக்காமல் அமைதியாக இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப் ‘நான் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் போரியில் தலையிடவில்லை என்றால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என அந்நாட்டு மக்களே கூறினார்கள்.. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும்.. அதை நான் தடுத்து நிறுத்தினேன்’ என பேசியிருக்கிறார்.