தமிழகம்

திமுகவுக்காக விஜயகாந்தை அப்படி திட்டினாரே வடிவேலு!. இப்ப தேமுதிகவுடன் கூட்டணி!.. வட போச்சே!..

2011 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு வடிவேலின் வீட்டின் முன்பு தேமுதிக நிர்வாகிகள் சிலர் காரை நிறுத்த அதில் கோபப்பட்ட வடிவேலு அவர்களுடன் சண்டை போட அது கைகலப்பில் முடிந்ததாக சொல்லப்பட்டது. அந்த கோபத்தில் 2011 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போனார் வடிவேலு.. தமிழகத்தில் உள்ள பல ஊர்களுக்கும் சென்று விஜயகாந்தை மிகவும் மோசமாக விமர்சித்து பேசினார்..

விஜயகாந்தை ‘குடிகாரன்’ என்று தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார் வடிவேலு.. வடிவேலுவை பார்க்க கூட்டம் கூடினாலும் அவையெல்லாம் திமுகக்கு ஓட்டாக மாறவில்லை.. அந்த தேர்தலில் திமுக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது.. இதன் காரணமாக விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் சட்டசபையில் அமர்ந்தார்..

ஒருபக்கம், சினிமாவிலும் வடிவேலுவுக்கு மவுசு குறைந்துபோனது. கடந்த பல வருடங்களாகவே வடிவேலு தன்னை திமுகவின் ஆதரவாளராகவே காட்டிக் கொள்கிறார். சில திமுக மேடைகளில் போய் பேசினர். தயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்தார்.. கிட்டத்தட்ட திமுக குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவராக மாறியிருக்கிறார் வடிவேலு. இந்நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது திமுக..

இது வடிவேலுக்கே அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.. ஒருபக்கம் இதை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் ‘வடிவேலு தலைமறைவாகிவிட்டார்’ என சமூக வலைதளங்களில் நக்கலடித்து வருகிறார்கள்..

Avatar photo
Web Staff