isha

கூட்டணி இல்லாமலேயே 30% ஓட்டு தவெகவுக்கு இருக்கிறதா? இன்னும் கொஞ்சம் தீவிர பிரச்சாரம் செய்தா 35%ஆக மாற வாய்ப்பு.. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் விஜய்க்கு மைனஸ்.. விஜய்யை ஒரு நிஜமான மாற்றாக மக்கள் பார்க்கின்றனர்.. காங்கிரஸ், தேமுதிக, பாமக, ஓபிஎஸ், சசிகலாவுடன் கூட்டணி வைத்தால், மாற்று என்ற பிம்பம் மாயமாகிவிடும்.. அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி கதவை அடைத்துவிட்டார் விஜய்.. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு எதிரணிகளை குழப்புவதற்கே.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வியூகம் ஒட்டுமொத்த அரசியலையும் திகைக்க வைத்துள்ளது. விஜய் தரப்பு தங்களது கட்சிக்கு ஏற்கனவே 30% மக்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது வெறும் தேர்தல் முழக்கமல்ல,…

vijay sengottaiyan stalin

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வியூகம் ஒட்டுமொத்த அரசியலையும் திகைக்க வைத்துள்ளது. விஜய் தரப்பு தங்களது கட்சிக்கு ஏற்கனவே 30% மக்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது வெறும் தேர்தல் முழக்கமல்ல, அது அவர்களது மாஸ்டர் பிளானின் ஒரு பகுதி என்பதை அரசியல் நோக்கர்கள் உணர்ந்துள்ளனர். இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்காத ஒரு கட்சிக்கு இவ்வளவு பெரிய வாக்கு வங்கி இருப்பதாக கூறுவது அதீதமாக தோன்றினாலும், சமீபத்திய சில கருத்துக்கணிப்புகள் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கை உறுதிப்படுத்துகின்றன. இன்னும் ஒரு சில மாதங்கள் தீவிப் பிரச்சாரம் செய்தால், இந்த 30% என்பது 35%-ஆக உயர்ந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விஜய்யை தனிப்பெரும் சக்தியாக மாற்ற வாய்ப்புள்ளது.

விஜய்யின் பலமே அவர் ஒரு மாற்று சக்தியாக பார்க்கப்படுவதுதான். மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது விஜய்க்கு பெரிய பின்னடைவாகவே முடியும். குறிப்பாக காங்கிரஸ், தேமுதிக, பாமக அல்லது ஓபிஎஸ் மற்றும் சசிகலா போன்ற பழைய அரசியல் முகங்களுடன் கைகோர்த்தால், மக்கள் மத்தியில் உருவாகியுள்ள புதிய மாற்றம் என்ற பிம்பம் உடைந்துவிடும். பழைய கட்சிகளின் மீதுள்ள அதிருப்தி விஜய்யின் மீதும் பாயக்கூடும் என்பதால், ஆரம்பத்திலிருந்தே கூட்டணி கதவை அவர் இழுத்து மூடிவிட்டார். யாரோடும் கூட்டணி இல்லை, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்ற அவரது பிடிவாதம், ஒரு தனித்துவமான அரசியல் அடையாளத்தை அவருக்கு வழங்கியுள்ளது.

அப்படியென்றால், அவர் அறிவித்த ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பின் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், இது மற்ற கட்சிகளை தன் பக்கம் இழுப்பதற்கான அழைப்பு என்பதை விட, எதிரணியில் இருக்கும் கூட்டணிகளை குழப்புவதற்காக வீசப்பட்ட ஒரு அரசியல் வெடிகுண்டு என்பதே நிதர்சனம். விஜய்யின் இந்த அறிவிப்பால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள், தங்களுக்கு ஏன் ஆட்சியில் பங்கு தரக்கூடாது என்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன. இதனால் திமுக கூட்டணிக்குள் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. எதிரிகளின் கூட்டணியை உடைப்பதன் மூலம், தனது வெற்றியை எளிதாக்கும் ஒரு ராஜதந்திரத்தையே விஜய் கையாண்டு வருகிறார்.

தமிழக மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் அந்த மாற்றமாக தன்னை நிலைநிறுத்தி கொள்வதில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். 1967 முதல் தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் ஆட்சி முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க துடிக்கும் நடுத்தர வர்க்கம் மற்றும் இளைய தலைமுறையினர், விஜய்யை ஒரு நம்பிக்கையாக பார்க்கின்றனர். மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், இதுவும் ஒரு வழக்கமான அரசியல் பேரம் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிடும். எனவே, தனி மரம் தோப்பாகும் என்ற நம்பிக்கையில் அவர் எடுக்கும் முடிவுகள், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் தனித்து நின்று நிகழ்த்திய சாதனையை மீண்டும் நினைவுபடுத்துகின்றன.

அரசியல் விமர்சகர்கள் ஆதங்கப்படுவது போல, காங்கிரஸோ அல்லது மற்ற கட்சிகளோ விஜய்யை காட்டி திமுகவை மிரட்டுவது அவர்களுக்கு சாதகமாக முடியலாம், ஆனால் விஜய்க்கு அது தேவையற்ற சுமையே. அவர் தனது 30% வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொண்டு, களத்தில் ஒரு புதிய சித்தாந்தத்தை பாய்ச்சுவதிலேயே குறியாக இருக்கிறார். மற்ற கட்சிகள் தங்கள் பிழைப்புக்காக விஜய்யை பயன்படுத்த பார்த்தாலும், அவர் யாரையும் தனது நிழலில் கூட சேர்க்காமல், தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க தயாராகிவிட்டார். தற்போது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விஜய்யின் “விசில்” சத்தம் கேட்பது திராவிட கோட்டைகளை அசைத்து பார்க்க தொடங்கிவிட்டது.

இறுதியாக, 2026 தேர்தலின் ஆட்டநாயகன் விஜய் என்பது தற்போதே முடிவாகிவிட்டது. அவர் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் அல்லது ஒரு பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், தமிழக அரசியலில் ஒரு புதிய துருவத்தை அவர் உருவாக்கிவிட்டார். 30% வாக்குகளை வைத்து கொண்டு அவர் நடத்தும் இந்த சதுரங்க ஆட்டம், வரும் மே மாதம் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சில் குழம்பிக்கொண்டிருக்க, விஜய் தனது இலக்கான “35% வாக்குகள் மற்றும் தனிப்பெரும்பான்மை” என்பதை நோக்கி அமைதியாக, ஆனால் உறுதியாக முன்னேறி வருகிறார்.