தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய் அரசியலில் தடம் பதித்ததிலிருந்து சமூக வலைத்தளங்கள் முதல் டீக்கடை பெஞ்சுகள் வரை அவரை பற்றிய விவாதங்களே பிரதானமாக உள்ளன. ஆரம்பத்தில் இவரை ஒரு சாதாரண சினிமா நடிகராக மட்டுமே பார்த்த அரசியல் விமர்சகர்கள், இப்போது அவரது வளர்ந்து வரும் வாக்கு சதவீதத்தை கண்டு வியந்து போயுள்ளனர். விஜய்யின் அரசியல் நகர்வுகள் மிகவும் திட்டமிட்டபடி இருப்பதாகவும், அவர் இளைஞர்கள் மற்றும் பெண்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருவதாகவும் தங்களது நிலைப்பாட்டை மெல்ல மெல்ல மாற்றி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுவாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் கையாளப்படும் பணப்பட்டுவாடா முறை இந்த முறை எடுபடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற பழைய கணக்குகள் விஜய்யின் வருகையால் சிதைந்து போயுள்ளன. மக்கள் தன்னிச்சையாக மாற்றத்தை விரும்பி ஒரு புதிய தலைவரை நோக்கி திரண்டு வருவதால், பாரம்பரிய அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை மாற்ற முடியாமல் திகைத்து நிற்கின்றன. பணபலத்தை விட மக்கள் பலம் மேலோங்கி நிற்பது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகி வரும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் விஜய்க்கு தான் முதலிடம் என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன. இது வெறும் சினிமா புகழால் கிடைத்த ஆதரவு மட்டுமல்ல, திராவிட கட்சிகளின் நீண்டகால ஆட்சி முறை மீது மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் விஜய்யின் செல்வாக்கு சீராக உயர்ந்து வருவது, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குமான தலைவர் அல்ல என்பதை நிரூபிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் திராவிட கட்சிகளின் கோட்டையை உலுக்க தொடங்கியுள்ளன.
திராவிடக் கட்சிகள் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசியலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால், இப்போது விஜய்யின் எழுச்சியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் அவை திக்கித் திணறுகின்றன. விஜய்யின் மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் அனைத்தும் அவருக்கான ஆதரவை இன்னும் அதிகப்படுத்துவதாகவே முடிகின்றன. மற்ற தலைவர்களை போல இல்லாமல், அவர் நிதானமாகவும் அதே சமயம் ஆணித்தரமாகவும் வைக்கும் கருத்துக்கள் இளைஞர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், வாக்குகள் சிதறிவிடுமோ என்ற பயம் பாரம்பரியக் கட்சிகளிடையே நிலவுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற அரசியல்வாதி இருந்ததே இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு, ஒரு சினிமா பிரபலம் அரசியலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இதுவே முதல்முறை. ஆனால், விஜய்யின் பாணி எம்.ஜி.ஆரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, தற்கால தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்ததாக இருக்கிறது. மக்கள் அவரை ஒரு மாற்றத்திற்கான குறியீடாக பார்ப்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனை.
நிச்சயமாக இது ஒரு அரசியல் அதிசயம் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. பலமான அடித்தளம் கொண்ட கட்சிகளையே ஆட்டம் காண வைக்கும் அளவிற்கு ஒரு தனி மனிதரின் செல்வாக்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. வரப்போகும் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரியும் நிலையில், இந்த அரசியல் அதிசயம் எந்த மாதிரியான புதிய ஆட்சியை தமிழகத்திற்கு வழங்கப்போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த நாடும் காத்து கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
